ரீசார்ஜ் செய்வோருக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கிய வோடபோன்.!
வோடபோன் வழங்கம் 100சதவிகிதம் கேஷ்பேக் சலுகை ரூ.399, ரூ.458, ரூ.509 போன்ற திட்டங்களில் வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவனம் தற்சமயம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி குறிப்பிட்ட பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கியுள்ளது வோடபோன் நிறுவனம். மேலும்
இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வோடபோன் வழங்கும் இந்த கேஷ்பேக் சலுகை என்னவென்றால் ரூ.50 மதிப்புள்ள கூப்பன்கள் வடிவில் கொடுக்கப்படுகிறது, இவை அடுத்தடுத்த ரீசார்ஜ் செய்யும் போது கூப்பன்களை மகி எளிமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

எந்தெந்த திட்டங்களில்:
வோடபோன் வழங்கம் 100சதவிகிதம் கேஷ்பேக் சலுகை ரூ.399, ரூ.458, ரூ.509 போன்ற திட்டங்களில் வழங்கப்படுகிறது, இந்த
சலுகைகளில் ஒன்றை ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 மதிப்புள்ள கேஷ்பேக் கூப்பன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மை வோடபோன் செயலி
வோடபோன் வழங்கும் கேஷ்பேக் கூப்பன்கள் பொறுத்தவரை மை வோடபோன் செயலி மூலம் அடுத்தடுத்த ரீசார்ஜ்களில்
பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஷ்பேக்
பின்பு வோடபோன் இப்போது அறிவித்த கேஷ்பேக் சலுகைகள் போன்று, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஏற்கனவே
வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது போன்ற கேஷ்பேக் சலுகைகள் தொடர்ந்து பல்வேறு டெலிகாம்
நிறுவனங்கள் வழங்கி வருகிறது.

கூப்பன்கள்
ரூ.399 ரீசார்ஜ் செய்வோருக்கு எட்டு கூப்பன்கள் வழங்கப்படுகிறது.
ரூ.458 ரீசார்ஜ் செய்வோருக்கு ஒன்பது கூப்பன்கள் வழங்கப்படுகிறது.
ரூ.509 ரீசார்ஜ் செய்வோருக்கு பத்து கூப்பன்கள் வழங்கப்படுகிறது.
குறிப்பான மேலே குறிப்பிடப்பட்ட திட்டங்களில் தினசரி 1.4ஜிபி டேட்டா சலுகை மற்றும் இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications