ரூ.799 செலுத்தி புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கலாம்! எப்படி தெரியுமா?

|

வோடபோன் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்படி 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க தனது பயனர்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் டெல்கோ நிறுவனமும் வோடபோன் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

ரூ.799 டவுன் பேமெண்ட்டில் ஸ்மார்ட்போன்

ரூ.799 டவுன் பேமெண்ட்டில் ஸ்மார்ட்போன்

இந்த கூட்டணியின் கீழ், இரு நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க ரூ.799 டவுன் பேமெண்ட் சலுகையை வழங்குகிறது. புதிய 4ஜி ஸ்மார்ட்போனுடன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தினசரி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுடன் 180 நாள் வேலிடிட்டி வழங்கியுள்ளது.

ரூ. 15,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன்

ரூ. 15,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன்

வாடிக்கையாளர்கள் ரூ. 15,000க்குள் இருக்கும் எந்த ஒரு 4ஜி ஸ்மார்ட்போனை வேண்டுமானாலும் இந்த சலுகையின் கீழ் தேர்வு செய்துகொள்ளலாம். இந்த சலுகை ஆறு மாதங்களுக்குக் கிடைக்கும் என்றும், மேலும் ஹோம் கிரெடிட் இந்தியா இயங்கும் 179 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர் இந்த வசதி கிடைக்கும் என்று வோடபோன் தெரிவித்துள்ளது.

ட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை! இனி எல்லாமே சேஃப்!ட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை! இனி எல்லாமே சேஃப்!

ஜியோ போன் சலுகைக்கு போட்டியாக

ஜியோ போன் சலுகைக்கு போட்டியாக

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜியோ அறிவித்த சிறப்புச் சலுகைக்குப் பின்னர், வோடபோனின் இந்த திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ஜியோவின் சலுகையின் கீழ், ஜியோ ஃபோனை வெறும் ரூ.699 என்ற விலையில் பெற்றுக்கொள்ளலாம். இதன் அசல் விளையான ரூ.1500 இல் இருந்து ரூ. 800 குறைக்கப்பட்டு, ரூ. 99 மதிப்புள்ள இலவச டேட்டாவையும் வழங்குகிறது.

ரூ.3,899-விலையில் அட்டகாசமான ஆண்ட்ராய்டு கோ ஸமார்ட்போன் அறிமுகம்.!ரூ.3,899-விலையில் அட்டகாசமான ஆண்ட்ராய்டு கோ ஸமார்ட்போன் அறிமுகம்.!

புதிய 4ஜி ஸ்மார்ட்போன் அறிய வாய்ப்பு

புதிய 4ஜி ஸ்மார்ட்போன் அறிய வாய்ப்பு

புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேடனும் என்று நினைக்கும் வோடபோன் பயனர்களுக்கு இந்த தீபாவளி கொண்டாட்ட சிறப்புச் சலுகை ஒரு அறிய வாய்ப்பு, இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வெறும் ரூ.799 டவுன் பேமெண்ட் மட்டுமே செலுத்தி புதிய 4ஜி ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளுங்கள்.

{

document1}

Best Mobiles in India

English summary
Vodafone Offering It's Users To Buy New 4G Smartphones At Just Rs.799 Down Payment : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X