ரொம்ப டைமிங் மிஸ் பண்றிங்க: வேற வழியின்றி Vodafone செய்த காரியம்- வாடிக்கையாளர்களே என்ஜாய்!

|

மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்றை அளவுக்கு ஏற்ப பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மொபைல் போன் மற்றும் தொலைத் தொடர்பு சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயையும் ஏ.ஜி.ஆர்., கணக்கில் சேர்க்க வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவை

மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவை

அதன்படி, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய உரிம கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமான ரூ. 41 ஆயிரம் கோடி என மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவையில் இருந்தது.

வரலாறு காணாத நஷ்டம்

வரலாறு காணாத நஷ்டம்

இரண்டாவது காலாண்டில் மட்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50 ஆயிரத்து 922 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. ஏர்டெல் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்தது.

மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்

மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்

இந்த நிலுவைத் தொகையை ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த தொகையை எந்த நிறுவனமும் செலுத்தவில்லை. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை மதிக்காத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் அடுத்த விசாரணை நடைபெறும் மார்ச் 17ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்திவிட வேண்டும் என உத்தரவிட்டனர்.

ரூ.18 ஆயிரம் கோடியை செலுத்திய ஏர்டெல்

ரூ.18 ஆயிரம் கோடியை செலுத்திய ஏர்டெல்

இதையடுத்து, பார்தி எர்டெல் நிறுவனம் தான் செலுத்த வேண்டிய ஏறக்குறைய ரூ.45 ஆயிரம் கோடியில் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை தொலைத்தொடர்புத் துறையிடம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் மீதமுள்ள தொகையை மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்துவதாகவும் அறிவித்தது. அதன்படி சமீபத்தில் ரூ.8004 கோடியை பார்தி ஏர்டெல் நிறுவனம் தொலை தொடர்பு துறைக்கு கட்டியது.

வோடபோன் கோரிக்கை

வோடபோன் கோரிக்கை

உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வோடபோன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வோடபோன் நிறுவனம் ₹2,500 கோடி செலுத்துவதாகவும், மேலும் ₹1,000 கோடியை அடுத்த ஐந்து நாட்களில் செலுத்துவதாகவும் கூறி, நிறுவனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டார். ஆனால், இவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். நிலுவைத் தொகையை முழுவதுமாக செலுத்த வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக உள்ளது.

விலையை உயர்த்த முடிவு

விலையை உயர்த்த முடிவு

வோடாபோன் ஐடியா நிறுவனம் தொலை தொடர்புத் துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 1 ஜிபி டேட்டாவிற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ 35 ஆக இருக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம் ரூ 50 ஆக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளது. அவுட்கோயிங் அழைப்புகளின் குறைந்தபட்ச விலையை நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயம் உள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

தினமும் 1.5 ஜிபி வழங்கும் திட்டம்

தினமும் 1.5 ஜிபி வழங்கும் திட்டம்

ரூ.249-க்கு முன்னதாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 1.5 ஜிபி டேட்டா ஆகியவை வழங்கி வந்தது. அதேபோல் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் ரூ.399-க்கு வழங்கப்பட்டு வந்த திட்டமும் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரம்பற்ற அழைப்பு தினசரி 1.5 ஜிபி டேட்டா ஆகியவை வழங்கி வந்தது. ரூ.599 மேலுள்ள சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட்டு அதன் வேலிடிட்டி மட்டும் 84 நாட்களாக வழங்கப்பட்டு வந்தது.

கூடுதலாக 1.5 ஜிபி வழங்கி அதிரடி

கூடுதலாக 1.5 ஜிபி வழங்கி அதிரடி

இந்த நிலையில் தற்போது மேலே வழங்கப்பட்டுள்ள மூன்று திட்டங்களுக்கும் தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய விலையில் தற்போது தினசரி 3 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். தங்களது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. யாரும் போர்டல் மாறிவிடாமல் தக்க வைத்துக் கொள்ள இந்த அறிவிப்பு வெளியிட்டிருக்கலாம் என தொலைத் தொடர்பு வட்டார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

வோடபோன் நிறுவனம் கடும் சிக்கல்

வோடபோன் நிறுவனம் கடும் சிக்கல்

வோடபோன் நிறுவனம் கடும் சிக்கலில் தவித்து வரும் நிலையில், நிறுவனம் மூடப்போவதாக தகவல்களும் வதந்திகளும் பரவி வருகின்றன. இதையடுத்து வாடிக்கையாளர்கள் வேறு போர்டலுக்கு மாறாமல் இருந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இரண்டாவது சிம் கார்ட் தேவையே இருந்திருக்காது

இரண்டாவது சிம் கார்ட் தேவையே இருந்திருக்காது

இருப்பினும் இதுபோன்ற திட்டங்கள் ஜியோ அறிமுகமான தேதியில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தால் இரண்டாவது சிம் என்ற பேச்சுக்கே இடம் வந்திருக்காது எனவும் வோடபோன் நிறுவனமும் இந்த அளவு நஷ்டத்தை சந்தித்திருக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone offering daily additional datas for prepaid customers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X