Just In
- 8 min ago
இப்படி ஒரு அம்சம் நம்ம Mobile போன்ல இருக்கா? WhatsApp யூசர்ஸ் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
- 24 min ago
5ஜி போன் இல்லையா? அப்போ உங்க காட்டில் மழைதான்! அறிமுகமானது Infinix Zero 5G 2023 சீரிஸ்!
- 1 hr ago
பட்ஜெட் விலையில் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
- 1 hr ago
பள்ளி, கல்லூரி மாணவர்களை குஷிப்படுத்தும் பட்ஜெட் விலையில் புதிய Lenovo லேப்டாப் அறிமுகம்!
Don't Miss
- News
"இந்து சாமி சிலைகள் குறி.." ஒரே இரவில் 12 இந்து கோயில்கள் மீது தாக்குதல்.. உச்சக்கட்ட பரபரப்பு.!
- Sports
1.5 வருட காத்திருப்புக்கு நியாயம் கிடைக்குமா? கே.எஸ்.பரத் vs இஷான் கிஷான்.. யார் விக்கெட் கீப்பர்??
- Finance
விடாமல் துரத்தும் Layoff.. Pinterest, ஆட்டோடெஸ்க் அறிவிப்பு.. பீதியில் டெக் ஊழியர்கள்..!
- Lifestyle
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
- Movies
மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற பிரபல இந்திய இசையமைப்பாளர்... பிரபலங்கள் வாழ்த்து!
- Automobiles
டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நாள் ஒன்றிற்கு 4.5ஜிபி மற்றும் 3.5ஜிபி; ஜியோ எதிர்பார்க்காத அடி; வோடாபோன் அதிரடி.!
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனமும் சந்தையில் தங்களின் கைகளை உயர்த்தும் நோக்கில் நிகழ்த்தும் ஒவ்வொரு நடவடிக்கையிலும், அதிவேக தரவுத் திட்டங்களின் விலை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது என்பதே நிதர்சனம்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஆனது இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் மறுகையில் - இதர டெலிகாம் நிறுவனங்கள், குறிப்பாக - வோடபோன் இந்தியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவைகள் மெதுவாக ஜியோவை நோக்கி முன்னேறிக்கொண்டே வருகின்றன.

இரண்டு புதிய ப்ரீபெய்ட் அறிமுகம்
இன்று வெளியான டெலிகாம்டால்க். இன்ஃபோ ஒன்றின் தகவலின்படி, வோடபோன் நிறுவனமானது மிக விரைவில் அதன் ரூ.799/- மற்றும் ரூ.549/- ஆகிய இரண்டு புதிய ப்ரீபெய்ட் கட்டண திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளது.

நாள் ஒன்றிற்கு 4.5ஜிபி
சுவாரசியம் என்னவெனில் கூறப்படும் இரு திட்டங்களும் ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தின் நன்மைகளுடன் பொருந்துகிறது. வெளியான தகவலின்படி வோடாபோன் ரூ.799/- ஆனது நாள் ஒன்றிற்கு 4.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

நாள் ஒன்றிற்கு 3.5ஜிபி
அதாவது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.799/- உடன் ஒப்பிடும் போது 0.5ஜிபி குறைவான டேட்டாவை வழங்குகிறது. மறுகையில் உள்ள வோடாபோன் ரூ.549/- ஆனது நாள் ஒன்றிற்கு 3.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதுவும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.509 கட்டணத்துடன் ஒப்பிடும் போது அதே 0.5ஜிபி அளவிலான டேட்டாவை குறைவாக வழங்குகிறது.

மொத்தம் 126 ஜிபி
வோடபோனின் வரவிருக்கும் ரூ.799/- திட்டமானது மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருக்கும். ஒரு நாளைக்கு 4.5 ஜிபி தரவை வழங்கும் ஆக இதன் செல்லுபடியாகும் காலத்தின் கீழ் கிடைக்கும் மொத்த டேட்டாவின் அளவு - 126 ஜிபி ஆகும்.

நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்
அழைப்பு நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த ரூ.799/- திட்டமானது வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு ஆகியவைகளுடன், செல்லுபடியாகும் காலம் வரையிலாக நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்கும்.

மொத்தம் 98 ஜிபி
மற்றொரு திட்டமான வோடாபோன் ரூ.549/- ஆனது ஒரு நாளைக்கு 3.5 ஜிபி அளவிலான தரவு என மொத்தம் 98 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த ரூ.549/- திட்டமானது வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு ஆகியவைகளுடன், செல்லுபடியாகும் காலம் வரையிலாக நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்கும்.

வார வரம்பு 1000 நிமிடங்கள்
இருப்பினும் வோடபோன் நிறுவனமானது, இன்னமும் அதன் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 250 நிமிடங்களுக்கு மட்டுமே இலவச குரல் அழைப்புகளை வழங்குகிறது. அதன் வார வரம்பு 1000 நிமிடங்கள் ஆகும். மேலும் திட்டம் செல்லுபடியாகும் காலத்தில் 300 தனிப்பட்ட எங்களுக்கு மட்டுமே அழைப்புகளை செய்ய முடியும் என்கிற வரம்பையும் கொண்டுள்ளது.


வரவிருக்கும் நாட்களில்
போட்டியாளர்களான பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆனது உண்மையான வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகின்றன. வரவிருக்கும் நாட்களில் வோடபோனின் பிரபலமான வட்டாரங்களில், இந்த கட்டண திட்டங்கள் இரண்டுமே உருட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470