jio vs vodafone: தினசரி 3 ஜிபி டேட்டா அதே விலையில்., நேருக்கு நேர் மோதும் திட்டங்கள்- எது சிறந்தது?

|

வோடபோன் நிறுவனம் தங்களது திட்டத்தின் சலுகைகளை இரட்டிப்பு செய்து அறிவித்தது. தற்போது ஜியோ வழங்கும் திட்டங்களோடு இந்த திட்டங்களை ஒப்பிட்டு வழங்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்றை

'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்றை

மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்றை அளவுக்கு ஏற்ப பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மொபைல் போன் மற்றும் தொலைத் தொடர்பு சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயையும் ஏ.ஜி.ஆர்., கணக்கில் சேர்க்க வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் சிக்கலை சந்தித்து வருகின்றன.

வோடபோன் நிறுவனம் கோரிக்கை

வோடபோன் நிறுவனம் கோரிக்கை

வோடாபோன் ஐடியா நிறுவனம் தொலை தொடர்புத் துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 1 ஜிபி டேட்டாவிற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ 35 ஆக இருக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம் ரூ 50 ஆக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளது. அவுட்கோயிங் அழைப்புகளின் குறைந்தபட்ச விலையை நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயம் உள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

தினசரி 2ஜிபி டேட்டா-வரம்பற்ற குரல் அழைப்பு: 365நாட்கள் வேலிடிட்டி.!பிஎஸ்என்எல்-ன் பலே சலுகை.!தினசரி 2ஜிபி டேட்டா-வரம்பற்ற குரல் அழைப்பு: 365நாட்கள் வேலிடிட்டி.!பிஎஸ்என்எல்-ன் பலே சலுகை.!

புதுவகை கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவு

புதுவகை கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவு

டேட்டா மற்றும் கால்களுக்கான புதுவகை கட்டணத்தை நிர்ணயிக்க டிராய் தயாராக இருந்தாலும், தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் ஏணைய நன்மைகளுடன் திட்டங்களைத் தொடங்குகின்றனர். வோடபோன் நிறுவனம் தங்களது திட்டங்களை இரட்டிப்பு சலுகையுடன் அறிவித்தது.

வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்த வோடபோன்

வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்த வோடபோன்

வோடபோன் நிறுவனம் வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்து வருவதாக சமீபத்தில் அறிவித்தது. அதேபோல் மத்திய அரசுக்கு செலுத்து வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதிலும் சிக்கலை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள நிறுவனங்கள் முயற்சித்து வருகிறது.

வோடபோன் Vs ரிலையன்ஸ் ஜியோ ரூ. 249  ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் Vs ரிலையன்ஸ் ஜியோ ரூ. 249 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.249-க்கு முன்னதாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 1.5 ஜிபி டேட்டா ஆகியவை வழங்கி வந்தது. தற்போது இதில் தினசரி 1.5 ஜிபி என்பதற்கு பதிலாக 3 ஜிபி என அறிவித்துள்ளது.

நிமிடத்திற்கு 6 பைசா என்ற வீதம்

நிமிடத்திற்கு 6 பைசா என்ற வீதம்

அதே விலையில் ஜியோ திட்டத்தை பார்க்கையில் பிற தொலைத் தொடர்பு நிறுவன அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்ற வீதம் வசூலிக்கிறது. இந்த திட்டமும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். வோடபோன் தனது இந்த திட்டத்தில் வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 ஆகியவற்றின் இலவச சந்தாவை வழங்குகிறது.

 வோடபோன் Vs ரிலையன்ஸ் ஜியோ ரூ. 399 ப்ரீபெய்ட் திட்டம்:

வோடபோன் Vs ரிலையன்ஸ் ஜியோ ரூ. 399 ப்ரீபெய்ட் திட்டம்:

ரூ.399-க்கு வழங்கப்பட்டு வந்த திட்டமும் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரம்பற்ற அழைப்பு தினசரி 1.5 ஜிபி டேட்டா ஆகியவை வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்திலும் 3 ஜிபியாக அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, 1.5 ஜிபி டேட்டா

ரிலையன்ஸ் ஜியோ, 1.5 ஜிபி டேட்டா

இதே விலையில் ரிலையன்ஸ் ஜியோ, 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் இலவச குரல் அழைப்புகளை மட்டுமே வழங்குகிறது. இதில் பிற தொலைத் தொடர்பு நிறுவன அழைப்புகளுக்கு 2000 நிமிடங்கள் என்ற குறிப்பிட்ட காலவரையறையை நிர்ணயித்து வழங்குகிறது.

வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ. 599, ரூ. 555 ப்ரீபெய்ட் திட்டம்:

வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ. 599, ரூ. 555 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த இரண்டு திட்டங்களும் ஒருவருக்கொருவர் கடுமையான போட்டிப் போட்டு வருகின்றன. வோடபோன் ரூ. 599 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு, 100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

உங்க வருகைக்கு வெயிட்டிங்: இந்த 14 வெப்சைட்களை தப்பித் தவறி கூட ஓபன் பண்ணாதிங்க!உங்க வருகைக்கு வெயிட்டிங்: இந்த 14 வெப்சைட்களை தப்பித் தவறி கூட ஓபன் பண்ணாதிங்க!

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 555 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 555 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 555 திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி 4 ஜி டேட்டாவுடன் வருகிறது. அதோடு, வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் போட்டிப்போட்டு கொண்டு திட்டங்களை அறிவித்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Now Offering Double Data Than Reliance Jio

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X