காப்பி அடிச்சாவது கம்பெனிய காப்பாத்தணும்.. Vodafone செஞ்ச வேலை.. பங்கம் செய்யும் Airtel கஸ்டமர்ஸ்!
"கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியா இருந்தா.. என்ன பண்ணுறது?" என்கிற பாணியில் வோடபோன் ஐடியா ஒரு வேலையை பார்த்துள்ளது. காப்பி அடித்தாவது கம்பெனியை காப்பாற்றி விட வேண்டுமென்கிற அளவுக்கு இறங்கிவிட்ட வோடாபோனின் பரிதாப நிலையை ஏர்டெல் கஸ்டமர்கள் விமர்சனம் செய்த வண்ணம் உள்ளனர்!
ஏனென்றால், வோடபோன் காப்பி அடித்தது - ஏர்டெல் நிறுவனத்தை பார்த்துதான். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான விஐ (Vi) அதன் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கான ஒரு புதிய திட்டத்தை சத்தம் போடாமல் அறிமுகம் செய்துள்ளது. அந்த திட்டத்தின் விலை ரூ.181 ஆகும்.

இந்த புதிய திட்டத்தில் 2 முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும். முதல் விஷயம் - இது ஏர்டெல் ரூ.181 திட்டத்தின் அட்டை காப்பியாகும். அதாவது வோடாபோனின் புதிய ரூ.181 திட்டமானது ஏர்டெல் ரூ.181-ன் கீழ் கிடைக்கும் அதே நன்மை மற்றும் அதே வேலிடிட்டியை வழங்குகிறது.
இதன் மூலம், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) போன்ற போட்டியாளர்களை வீழ்த்த வேண்டுமென்றால் அல்லது குறைந்தபட்சம் சமாளிக்க வேண்டுமென்றால்.. தன் பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வித்தியாசமான திட்டங்களை வழங்க வேண்டும் என்கிற எண்ணமே வோடாபோனிடம் இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
இந்த திட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய இரண்டாவது விஷயம் - ஏர்டெல்லை பார்த்து காப்பி அடிக்கப்பட்ட விஐ ரூ.181 திட்டமானது ஒரு 4ஜி டேட்டா வவுச்சராகும். அதாவது வாய்ஸ் கால், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் வரும் அடிப்படை திட்டத்திற்கு மேல் ரீசார்ஜ் செய்யக்கூடிய டேட்டா பிளானாகும்.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், வோடபோன் ரூ.181-ன் கீழ் டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோவும், ஏர்டெல்லும் நாடு முழுவதும் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்து வரும் மறுகையில் வோடாபோன் ஐடியா என்ன செய்துள்ளது? - 5ஜி அறிமுகம் பற்றி வாயே திறக்காமல், ஒரு 4ஜி டேட்டா வவுச்சரை காப்பி அடித்துள்ளது!
சரி இருக்கட்டும்! இப்போதைக்கு விஐ 5ஜி அறிமுகமாக போவதில்லை. எனவே நீங்களொரு வோடபோன் கஸ்டமராக இருந்தால், ஒவ்வொரு நாளும் கூடுதல் டேட்டாவை பயன்படுத்துபவராக இருந்தால், வீட்டிலிருந்து வேலை (WFH) செய்வபவராக இருந்தால், அடிக்கடி ஆன்லைனில் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்பவராக இருந்தால் புதிய ரூ.181-ஐ கருத்தில் கொள்ளலாம்.
ஏனென்றால், இது 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 30ஜிபி டேட்டா கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் ஏர்டெல்லின் ரூ.181 திட்டமும் கூட இதே (ஒரு நாளைக்கு 1ஜிபி & 30 நாட்கள் வேலிடிட்டி) நன்மைகளை தான் வழங்குகிறது.
ஒருவேளை நீங்கள் 5ஜி ஸ்பீடை அனுபவிக்க விரும்பினால், வேறு வழியே இல்லை நீங்கள் ஏர்டெல் 5ஜி அல்லது ஜியோ 5ஜி-யின் பக்கம் தான் சாய வேண்டும். ஏனென்றால், இந்தியா முழுவதும் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்ய வோடாபோன் ஐடியாவிடம் தற்போதைக்கு நிதி இல்லை (இந்நிறுவனம் நிதியுதவியை தேடியும் வருகிறது)!
மேலும் இந்நிறுவனம் கடந்த 22 மாதங்களாகவே அதன் சந்தாதாரர்களை மெல்ல மெல்ல இழந்தும் வருகிறது. விரைவில் விஐ நிறுவனமானது அதன் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்யவில்லை என்றால், இந்நிறுவனத்தின் கீழ் உள்ள ஆக்டிவ் யூசர்களின் (Active Users) எண்ணிக்கை வரும் மாதங்களில் 200 மில்லியனுக்கும் கீழே குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!


Click it and Unblock the Notifications