Home
News

11,000 Vodafone ஊழியர்களின் வேலை காலி.. புதிய CEO அதிரடி நடவடிக்கை.. என்ன காரணம் சொல்லி இருக்கார் தெரியுமா?

வோடாபோன் (Vodafone) நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி (New CEO) ஆன மார்கெரிட்டா டெல்லா வால்லே (Margherita Della Valle), அடுத்த மூன்று ஆண்டுகளில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் (Layoffs) செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள காரணத்தையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள காரணத்தை பற்றி பேசும் போது ஒரு எளிமையான அமைப்பை (Simpler Organisation) தேடும் நோக்கத்தின் கீழ் தான் இந்த பணிநீக்கம் நடைபெறவுள்ளது.. எங்கள் செயல்திறன் போதுமானதாக இல்லை.. தொடர்ந்து முன்னேற வோடபோன் நிறுவனமானது மாற வேண்டும் என்று மார்கெரிட்டா கூறியுள்ளார்.

11,000 Vodafone ஊழியர்களின் வேலை காலி.. புதிய CEO-வின் அதிரடி!

மேலும் "வாடிக்கையாளர்களும், எளிமை மற்றும் வளர்ச்சியுமே எனது முன்னுரிமைகள் ஆகும். நாங்கள் எங்கள் நிறுவனத்தை எளிதாக்குவோம், எங்கள் போட்டித்தன்மையை (Competitiveness) மீண்டும் பெற நிறுவனத்தின் சிக்கல்களை குறைப்போம்" என்றும் வோடபோனின் புதிய சிஇஓ-வான மார்கெரிட்டா டெல்லா வாலே கூறி உள்ளார்.

வோடபோன் நிறுவனமானது, சமீப காலமாகவே அதன் பெரிய சந்தைகளில் குறிப்பிடத்தக்க பணிநீக்கங்களை செய்து வருகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இத்தாலியில் 1,000 பேரை பணிநீக்கம் செய்திருந்தது மற்றும் ஒரு ஊடக அறிக்கையின்படி ஜெர்மனியில் சுமார் 1,300 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில் தான் அடுத்த 3 ஆண்டுகளில் 11,000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்கிற வெளிப்படையான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வோடபோன் இந்த பணிநீக்க செயல்திட்டமானது மூன்று முன்னுரிமைகளில் கவனம் செலுத்த உள்ளது. முதலாவதாக வரும் நிதியாண்டில் வாடிக்கையாளர் அனுபவம் மேம்படுத்தப்படும் மற்றும் குறிப்பிடத்தக்க முதலீடுகளில் கவனம் செலுத்தப்படும்.

இரண்டாவதாக தலைமையகம் (Headquarters) மற்றும் உள்ளூர் (Local) சந்தைகளை எளிமைப்படுத்தும் நோக்கத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 11,000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். மூன்றாவதாக வோடாபோனின் மிகப்பெரிய சந்தைகளான ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில், மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரும் மூலோபாய திட்டங்கள் கட்டவிழ்த்து விடப்படும்.

முன்னரே குறிப்பிட்டப்படி மார்கெரிட்டா டெல்லா வாலே, வோடாபோன் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஆவார். நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சிக்கு பின்னர் நிக் ரீட் (Nick Read) கடந்த டிசம்பர் மாதம் தனது சிஇஓ பதவியில் இருந்து விலகினார். இவர் நான்கு ஆண்டுகளாக வோடபோனின் சிஇஓ-வாக இருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Layoffs New CEO Margherita Della Valle Says Company To Cut 11000 Jobs in Next 3 Years
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X