Home
News

வோடபோன் அறிவித்துள்ள புதிய கேஷ்பேக் சலுகைகள் மற்றும் அதன் விவரங்கள்.!

வோடபோன் ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை தேர்வு செய்யப்பட்ட பத்து லாவா போன் மாடல்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.

By Prakash

ஜியோவின் பீச்சர்போன் வருவதை அடுத்து முக்கிய தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் இப்போது வோடபோன் லாவா மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து 2ஜி பீச்சர் போனை வாங்குவோருக்கு வாய்ஸ்கால் மற்றும் கேஷ்பேக் ஆபர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வோடபோன் அறிவித்துள்ள புதிய கேஷ்பேக் சலுகைகள் மற்றும் அதன் விவரங்கள்.!

இப்போது அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் பீச்சர்போனில் அதிக கவனம் செலுத்திவருகின்றன, அதன்பின் வாய்ஸ் கால் சலுகைகள் அதிகம் வருவதற்க்கு வாய்ப்பு உள்ளன, பிஎஸ்என்ஸ் நிறுவனம் தற்சமயம் பீச்சர்போன் நிறுவனங்களுடன் இணைந்து வாய்ஸ் ஆபர்களை வழங்க திட்டமிட்டுள்ளன.

வோடபோன்:

வோடபோன்:

வோடபோன் மற்றும் லாவா நிறுவனங்கள் இணைந்து புதிய திட்டமிட்டுள்ளன, அதன்படி 2ஜி பீச்சர்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.100 ரீசார்ஜ் செய்தால் ரூ.50 மதிப்பிலான டாக்டைம் 18 மாதங்களுக்கு வழங்கப்படும்.

லாவா:

லாவா:

வோடபோன் ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை தேர்வு செய்யப்பட்ட பத்து லாவா போன் மாடல்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும், அதன்பின் லாவா பீச்சர் போனை வாங்கும்போது அதிகபட்சம் ரூ.900 வரை கேஷ்பேக் ஆபர் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பீச்சர் போன்:

பீச்சர் போன்:

ஏஆர்சி 101, கேகேடி 9எஸ், கேப்டன் கே1 பிளஸ் ஏஆர்சி 105, கேப்டன் என்1, ஏஆர்சி ஒன்பிளஸ், கேகேடி 34 பவர், கேகடி 40 பவர்போன்ற பீச்சர் போன் மாடல்களுக்கு இந்த கேஷ்பேக் ஆபர் வழங்கப்படுகிறது.

ரூ.2000 பீச்சர்போன்:

ரூ.2000 பீச்சர்போன்:

தற்போது வெளிவரும் இந்த பீச்சர்போன் விலைப் பொறுத்தவரை ரூ.2000 வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஜியோவின் பீச்சர்போன் வருவதை அடுத்து இந்த புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Vodafone Lava Offer Rs 900 As Cashback Details Here; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X