Home
News

தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரோமிங் சேவையை வழங்கும் வோடோபோன்

By Karthikeyan
தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரோமிங் சேவையை வழங்கும் வோடோபோன்

இந்தியாவில் கணிசமான அளவில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் வோடோபோன் இந்தியா நிறுவனம், பல புதிய அன்லிமிட்டட் டேட்டா பேக்கஜ் திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. குறிப்பாக இந்த திட்டங்களை ஜப்பான் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு செல்லும் வோடோபோன் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டங்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.

வோடோபோன் வழங்கு இந்த உலக அளவிலான ரோமிங் டேட்டா பேக்கேஜ் ஆபர் திட்டங்கள் வோடோபோன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த ஆபர் மூலம் இந்தியாவில் உள்ள வோடோபோன் வாடிக்கையாளர்கள் வெளி நாடுகளுக்கு பயணம் செய்யும் போது தங்கள் மொபைல் இந்த டேட்டாவை பயன்படுத்த முடியும்.

இந்த உலக அளவிலான ரோமிங் டேட்டா பேக்கேஜ் 3 மாடல்களில் வருகிறது. அதாவது இந்த ரோமிங் சேவையை 3 நாள்களுக்கு ரூ.1499 செலுத்தி பயன்படுத்தலாம். அல்லது 5 நாள்களுக்கு ரூ.2499 செலுத்தி பயன்படுத்தலாம். மேலம் 7 நாள்களுக்கு ரூ.3499 செலுத்தி பயன்படுத்தலாம்.

இந்த டேட்டா சேவையை ஜப்பானில் சாப்ட்பேங்க் நெட்வொர்க்கின் கூட்டணியிலும், சவூதி அரேபியாவில் மொபிலிட்டி நெட்வொர்க்கின் கூட்டணியிலும் வழங்குகிறது. மேலும் ஜப்பானுக்கான இந்த சேவையை ஆக்டிவேட் செய்ய ACTULJPN3/5/7 என்று டைப் செய்து 111 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

அதுபோல் சவூதி அரபியாவிற்கான இந்த சேவையை ஆக்டிவேட் செய்ய ACTULSAU3/5/7 என்று டைப் செய்து 111 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X