அன்லிமிடெட் வாய்ஸ் + 4ஜி டேட்டா வழங்கும் ரூ.69/- வோடபோன் திட்டம்.!

|

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து வோடபோன் நிறுவனம் அதன் பயனர்களுக்கான சூப்பர்டே (SuperDay) மற்றும் சூப்பர்வீக் (SuperWeek) திட்டங்களை வழங்கி வருகிறது. ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும் திட்டங்கள் சூப்பர்டே திட்டங்களின் கீழும், ஒரு வார காலம் செல்லுபடியாகும் திட்டங்கள் சூப்பர்வீக் திட்டங்களுக்கு கீழும் அணுகப்படுகின்றன.

அந்த வரிசையில் வோடபோன் இந்தியா அதன் புதிய சூப்பர் வீக் திட்டமொன்றை அதன் பயனர்களுக்கு அறிவித்துள்ளது. அதென்ன திட்டம்.? அதன் நன்மைகள் என்ன.? அதை ரீசார்ஜ் செய்வதற்கான வழிமுறைகள் என்ன.?

ரூ.69/-

ரூ.69/-

அறிமுகமாகியுள்ள இந்த புதிய வாராந்திர திட்டமானது ரூ.69/- என்ற விலைமதிப்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன் சேர்த்து 500எம்பி அளவிலான டேட்டாவையும்ய வழங்குகிறது.

ஒவ்வொரு 7 நாட்களுக்கும்

ஒவ்வொரு 7 நாட்களுக்கும்

இந்த ரீசார்ஜ் திட்டமானது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய திட்டமால்ல என்பதால் இதனை ஒவ்வொரு 7 நாட்களுக்கும் வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்து பயனடையலாம்.

ரூ.52/-

ரூ.52/-

டெல்லி என்சிஆர் வாடிக்கையாளர்களுக்கு ரூ.52/- என்ற விலையில் மற்றொரு சூப்பர்வீக் திட்டமொன்றும்கி டைக்கிறது. இது 250எம்பி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகிறது.

ரூ.76/-

ரூ.76/-

ரூ.76/-க்கு கிடைக்கும் மற்றொரு சூப்பர்வீக் திட்டமானது 7 நாட்களுக்கு செல்லுபடியாகும் 500எம்பி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற எவெளியூர் மற்றும் உள்ளூர் அழைப்புகளை வழங்குகிறது.

ரூ.87/-

ரூ.87/-

கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகமானதொரு சூப்பர்வீக் திட்டமான ரூ.87/- ஆனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 250எம்பி அளவிலான 4ஜி டேட்டாவுடன் வரம்பற்ற அழைப்புகளையும் வழங்குமிந்த வாய்ப்பு 4ஜி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வோடபோன்-டூ-வோடபோன்

வோடபோன்-டூ-வோடபோன்

மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு 50எம்பி தரவு மட்டுமே கிடைக்கும். உடன் வோடபோன்-டூ-வோடபோன் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மட்டுமே பொருந்தும். மற்ற நெட்வொர்க்குகளுடனான உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு 100 நிமிட பேச்சு நேரம் என்று வரையறுக்கப்படும்.

ரூ.392/-

ரூ.392/-

ஜியோவுடன் போட்டியிடும் முனைப்பில் வோடபோன் நிறுவனம் சமீபத்தில் அதன் ரூ.392/- திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வெளியூர், உள்ளூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் ஆகிய நன்மைகளுடன் 28ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இருப்பினும் இந்த ரூ.392/- திட்டமானது தில்லி-என்சிஆர் வட்டத்தில் மட்டுமே கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
This is not a one-time pack so the customers can repeatedly purchase the pack on every 7 days.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X