வோடபோன் : இரண்டு வரம்பற்ற வாய்ஸ் கால் ரீசார்ஜ் தொகுப்புகள் அறிமுகம்.!
ஏர்டெல், ஐடியாவை தொடர்ந்து ஜியோவுடன் போட்டிபோடும் முனைப்பில் வோடபோன் நிறுவனமும் அதன் வரம்பற்ற குரல் அழைப்பு தொகுப்புகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மத்தியில் நிகழும் போட்டி ஒரு முடிவுக்கு வருவது போல் தோன்றவில்லை. ஏர்டெல், ஐடியாவை தொடர்ந்து வோடபோன் நிறுவனமும் இரண்டு வரம்பற்ற குரல் அழைப்புகளுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய வோடபோன் வரம்பற்ற குரல் அழைப்பு திட்டங்களின் விலை ரூ.144/- மற்றும் ரூ.349/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ரூ.144 முதல் ரூ.149/- வரை என வோடபோன் வரம்பற்ற குரல் தொகுப்பு அழைப்பு திட்டத்தின் விலை வட்டத்திற்கு ஏற்றபடி மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பேக் மூலம் பயனர்கள் நாட்டில் எந்த நெட்வொர்க் உடனான உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை அனுபவிக்கலாம். உடன் இந்த வரம்பற்ற அழைப்புகள் பேக் ஆனது வோடபோன் பயனர்களுக்கு இலவச உள்வரும் தேசிய ரோமிங் அழைப்புகள் மற்றும் 300எம்பி அளவிலான 4ஜி தரவையும் வழங்குகிறது.

இதேபோல், மற்றொரு புதிய பேக் ஆனது ரூ.344 - ரூ.349/- வரை என வட்டத்திற்கு ஏற்ற விலை மாறுபாட்டை கொண்டிருக்கும். இந்த வோடபோன் வரம்பற்ற அழைப்பு ரீசார்ஜ் பேக் ஆனதும் நாட்டில் எந்த நெட்வொர்க் உடனான உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகிறது. உடன் இலவச உள்வரும் தேசிய ரோமிங் அழைப்புகள் மற்றும் 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவையும் வழங்கும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களும் 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பதும், இந்த இரண்டு புதிய வோடபோன் வரம்பற்ற அழைப்பு ரீசார்ஜ் பொதிகளும் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் வழங்கிய வரம்பற்ற அழைப்பு திட்ட தொகுப்பை போன்றே விலை மற்றும் சலுகைகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
"நானும் ரவுடிதான்" என்பது போல ஏர்டெல் அதிரடிக்கு டோகோமோ பதிலடி.!!


Click it and Unblock the Notifications