84நாட்கள் வேலிடிட்டி, 168ஜிபி டேட்டா: வோடபோனின் இரண்டு திட்டங்கள் அறிமுகம்.!
வோடபோன் 189 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை 2ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள் ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளை 56 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.
வோடபோன் நிறுவனம் தற்சமயம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக இரண்டு சூப்பர் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.
வோடபோன் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ள முதல் திட்டம் என்னவென்றால் ரூ.511,இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மொத்தமாக 168ஜிபி
டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங்,எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன்
வோடபோன் இன்று அறிமுகம் செய்துள்ள இரண்டாவது திட்டம் என்னவென்றால் ரூ.569, இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா வீதம் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மொத்தமாக 252ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங், எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வோடபோன் நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த சில திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் 189 ப்ரீபெய்ட் திட்டம்:
வோடபோன் 189 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை 2ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள் ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளை 56 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படவில்லை.

வோடபோன் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம்:
வோடபோன் வாடிக்கையாளர்கள் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ரோமிங் போன்ற சலுகை வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தை 84 நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்:
வோடபோன் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் போன்ற சேவைகள் 28நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் டேட்டா நன்மைகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.109 திட்டம்:
வோடபோன் ரூ.109 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் போன்ற சேவைகள் 28நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று வோடபோன் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ரூ.159/- ப்ரீபெயிட் திட்டம்:
வோடபோன் வழங்கும் ரூ.159/- ப்ரீபெயிட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 28ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டதில் இலவச கால் அழைப்பு வசதி மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

வோடபோன் ரூ.479 திட்டம்:
வோடபோன் வழங்கும் ரூ.479 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் பயன்படுத்த முடியும், மொத்தமாக 126ஜிபி டேட்டா இந்த திட்ட்தில் கிடைக்கிறது. மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications