வோடபோன் ரூ.999 பிரீபெய்ட் திட்டம் அறிமுகம்: என்னென்ன சலுகை.!
றிப்பாக 365நாட்கள் இந்த அட்டகாசமான திட்டத்தைப் பயன்படுத்த முடியும்.
வோடபோன் நிறுவனம் தற்சமயம் ரூ.999 பிரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, பின்பு இந்த திட்டத்தில் தினசரி அன்லிமிடெட் கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. பின்பு 12ஜிபி டேட்டா இந்த
திட்டத்தில் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 365நாட்கள் இந்த அட்டகாசமான திட்டத்தைப் பயன்படுத்த முடியும். மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.16பிரீபெய்ட்
வோடபோன் ரூ.16பிரீபெய்ட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஒரு நாள் மட்டுமே வழங்கப்படுகிறது. வோடபோனின் ரூ.129 பிரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டதில் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.1,999 பிரீபெய்ட்
வோடபோன் நிறுவனத்தின் புதிய ரூ.1,999-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை 365நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.1,699 பிரீபெய்ட்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது. பின்பு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த திட்டத்தை ஒரு வருடம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் வோடபோன் பிளே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது, இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து
ரசிக்கலாம்.

வோடபோன் ரூ.479 ப்ரீபெய்ட்
வோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச எஸ்எம்எஸ், ரோமிங், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

வோடபோன் ரூ.209 ப்ரீபெய்ட்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications