புத்தம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் வோடா: ஜியோ இப்போ வாடா.!
வோடபோன் நிறுவனம் தற்சமயம் ரூ.509/-திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த திட்டதில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 90 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி ரம்ஜான் ஆஃபர் எனும் தலைப்பில் தினசரி 1.4ஜிபி மற்றும் 3ஜிபி டேட்டா வழங்கும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது வோடபோன் நிறுவனம்.மேலும் இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஜியோ நிறுவனம் விரைவில் புதிய திட்டத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்போது வோடபோன் அறிவித்துள்ளது இந்த புதிய திட்டம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் இணைய சேவை வேகத்தில் தற்சமயம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

ரூ.509/-திட்டம்:
வோடபோன் நிறுவனம் தற்சமயம் ரூ.509/-திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த திட்டதில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம்
90 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

ரூ.569/-திட்டம்:
வோடபோனின் ரூ.569/-திட்டதில் தினசரி 3ஜிபி டேட்டா வீதம் 84 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

ரூ.511/-திட்டம்:
வோடபோனின் ரூ.511/-திட்டதில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 90 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

ரூ.349/-ப்ரீபெய்ட்:
வோடபோன் நிறுவனம் இப்போது ரூ.349/-ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி வீதம் 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தை வெறும் 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று வோடபோன் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications