Home
News

வோடபோனின் ரூ.21/- அறிமுகம்; ஜியோவை மிஞ்சும் "உண்மையான" அன்லிமிடெட்.!

வோடாபோன் இந்தியா நிறுவனம் அதன் அதிரடியான ரூ.21- திட்டத்தை அறிவித்துள்ளது.

By Muthuraj

இந்திய தொலைத் தொடர்பு துறையினுள் மாபெரும் கட்டண புரட்சியை ஏற்படுத்திய முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவை, வலுவான முறையில் எதிர்க்கும் நோக்கத்தின்கீழ் வோடாபோன் இந்தியா நிறுவனம் அதன் அதிரடியான ரூ.21- திட்டத்தை அறிவித்துள்ளது.

வோடபோனின் ரூ.21/- அறிமுகம்; ஜியோவை மிஞ்சும்

இந்த புதிய வோடாபோன் ப்ரீபெய்ட் பேக்கின் நன்மைகள் என்ன.? இதன் செல்லுபடி காலம் என்ன.? இது ரிலையன்ஸ் ஜியோவின் எந்த திட்டத்துடன் போட்டியிடுகிறது.? வோடாபோன் வழங்கும் மேலும் பல சிறப்பான திட்டங்கள் என்னென்ன.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.

ஜியோவின் ரூ.19/-க்கு போட்டி.!

ஜியோவின் ரூ.19/-க்கு போட்டி.!

அறிவிக்கப்பட்டுள்ள வோடபோன் ரூ.21/- ஆனது வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே என்கிற செல்லுபடியை கொண்டிருந்தாலும் கூட "உண்மையான" வரம்பற்ற 3ஜி / 4ஜி தரவு அணுகலை வழங்குகிறது. இந்த வோடபோன் ரூ.21/- பேக் ஆனது நேரடியாக ஜியோவின் ரூ.19/- என்கிற ப்ரீபெய்ட் பேக் உடன் போட்டியிடுகிறது. ஜியோவின் ரூ.19/- ஆனது 150எம்பி அளவிலான 4ஜி டேட்டாவை ஒரு நாள் என்கிற செல்லுபடியின் கீழ் வழங்குகிறது.

எது பெஸ்ட்.?

எது பெஸ்ட்.?

உடன் ஜியோவின் ரூ.19/- பேக் ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள், 20 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, விலை நிர்ணயத்தில் (டேட்டா நன்மை) வோடாபோன் மலிவானதாக இருப்பினும் வழங்கும் நன்மைகளை பொறுத்தமட்டில், இரு திட்டங்களுக்கும் இடையே ஏகப்பட்ட வேறுபாடுகள் இருப்பது வெளிப்படை. ஒரு குறுகிய காலத்தில் (1 மணி நேரம்) அதிக அளவிலான தரவு தேவை எனில், வோடபோன் ரூ.21/- ஐ தேர்வு செய்யவும்.

பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.49/-ன் நன்மைகள்.!

பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.49/-ன் நன்மைகள்.!

மறுபுறம், மிக குறைவான டேட்டா பயன்பாடு மற்றும் அதிக அளவிலான அழைப்பு நண்மைகள் வேண்டுமெனில் ஜியோ ரூ.19/-ஐ தேர்வு செய்யவும். ஜியோவின் ஒரு நாள் செல்லுபடியாக்கலுடன் ஒப்பிடுகையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் 1ஜிபி அளவிலான 3ஜி / 4 ஜி தரவை ரூ.49/-க்கு வழங்கிவது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.299/- திட்டத்துடன் ஒப்பிடும் போது.!

ஜியோ ரூ.299/- திட்டத்துடன் ஒப்பிடும் போது.!

சமீபத்தில் வோடாபோன் இந்தியா அதன் ரூ.299/- திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டமானது வோடபோன் நிறுவனத்தின் மற்ற வட்டங்களில் கிடைக்கும்படி 3ஜி அல்லது 4ஜி டேட்டாவை வழங்காது, 2ஜி டேட்டா வழங்குகிறது என்று என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வோடாபோன் ரூ.299/- ஆனது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299/ என்கிற ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஒப்பிடும் போது, ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குகிறது.

மிக விரைவில்.!

மிக விரைவில்.!

அதாவது வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் (தினசரி / வார வரம்பை கொண்ட) சேர்த்து, நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான தரவு மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. தற்போது வரையிலாக, ​​இந்த திட்டமானது மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் மிக விரைவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் உள்ள வோடபோன் பயனாளர்களுக்கும், மோசமான வோடாபோன் 4ஜி கவரேஜ் உள்ள வட்டாரங்களிலும் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

56ஜிபி டேட்டா கிடைக்கும்.!

56ஜிபி டேட்டா கிடைக்கும்.!

இந்த திட்டத்தின் மொத்த நன்மைகளைப் பற்றி பேசுகையில் 56ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது இந்த திட்டம் ரூ.56 நாட்கள் செல்லுபடியாகும் என்று அர்த்தம். ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கினாலும் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்கிற வரம்பை கொண்டுள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
84 நாட்களுக்கும் செல்லுபடி.!

84 நாட்களுக்கும் செல்லுபடி.!

அதே வட்டத்தில் வோடாபோன் ரூ.459, ரூ.409, ரூ.349/- மற்றும் ரூ.176/- ஆகிய திட்டங்களும் கிடைக்கிறது. இந்த முதல் 3 திட்டங்களும் ரூ.299/- வழங்கும் அதே நன்மைகளை வெவ்வேறு செல்லுபடியை கொண்டுள்ளது. உதாரணமாக, வோடாபோன் ரூ.459/- ஆனது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும், ரூ.409/- ஆனது 84 நாட்களுக்கும் செல்லுபடியாகும். இறுதியாக ரூ.176/- என்கிற கட்டணத் திட்டமானது 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் மற்றும் பல தொலைத்தொடர்பு துறை சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெலிகாம் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Vodafone launches Rs. 21 prepaid plan to compete with Reliance Jio. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X