வோடபோன் ரூ.189 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்: எவ்வளவு நாள் வேலிடிட்டி தெரியுமா?

    ஜியோ நிறுவனத்தின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்திற்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் ரூ.189 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் பல்வேறு வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான்
    கூறவேண்டும்.

    ஜியோ வழங்கும் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் 2ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    வோடபோன் 189 ப்ரீபெய்ட் திட்டம்:

    வோடபோன் 189 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை 2ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள் ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளை 56 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படவில்லை.
    பின்பு வோடபோன் நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.

    வோடபோன் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம்:

    வோடபோன் வாடிக்கையாளர்கள் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ரோமிங் போன்ற சலுகை வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தை 84 நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    வோடபோன் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்:

    வோடபோன் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் போன்ற சேவைகள் 28நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் டேட்டா நன்மைகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    வோடபோன் ரூ.109 திட்டம்:

    வோடபோன் ரூ.109 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் போன்ற சேவைகள் 28நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று வோடபோன் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வோடபோன் ரூ.159/- ப்ரீபெயிட் திட்டம்:

    வோடபோன் வழங்கும் ரூ.159/- ப்ரீபெயிட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 28ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டதில் இலவச கால் அழைப்பு வசதி மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

    வோடபோன் ரூ.479 திட்டம்:

    வோடபோன் வழங்கும் ரூ.479 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் பயன்படுத்த முடியும், மொத்தமாக 126ஜிபி டேட்டா இந்த திட்ட்தில் கிடைக்கிறது. மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    வோடபோன் ரூ.529 திட்டம்:

    வோடபோனின் ரூ.529 திட்டத்தில் தினசரி 1.5டேட்டா வீதம் 90 நாட்கள் பயன்படுத்த முடியும்,மொத்தமாக இந்த திட்டத்தில் 135ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் தினசரி 300எஸ்எம்எஸ் மற்றம் இலவச கால் அழைப்புகள் போன்ற அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    Vodafone launches Rs 189 plan offering unlimited calling for 56 days: Read more about this in Tamil GizBot
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more