நாள் ஒன்றிற்கு 1ஜிபி + வாய்ஸ் வழங்கும் வோடாபோனின் ரூ.158/- அறிமுகம்.!
நன்மைகளை பொறுத்தமட்டில் இந்த வோடாபோன் ரூ.158/- ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டா ஆகியவைகளை வழங்குகிறது.
பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் ரூ.149/- என்கிற ப்ரீபெய்ட் திட்டங்களை எத்ரிக்கொள்ளும் முனைப்பில் வோடபோன் இந்தியா நிறுவனம் அதன் ரூ.158/- என்கிற புதிய கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது வரையிலாக இந்த வோடபோன் ரூ.158/- ப்ரீபெய்ட் திட்டமானது, கேரள வட்டத்தில் உள்ள வோடாபோன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மீதமுள்ள வட்டங்களுக்கும் உருட்டப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.158-ன் நன்மைகள்
நன்மைகளை பொறுத்தமட்டில் இந்த வோடாபோன் ரூ.158/- ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டா ஆகியவைகளை வழங்குகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தத் திட்டம் மற்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களை போன்று எஸ்எம்ஸ் நன்மைகளை வழங்கவில்லை.

டேட்டா+ வாய்ஸ்
வோடாபோன் ரூ.158/-ன் முதல் குறையாக அதன் விலை உள்ளது, இதர நிறுவனங்களின் திட்டங்களை விட சற்றே விலை அதிகமாய் உள்ளது. மற்றொரு குறையாக, இதர டெலிகாம் திட்டங்களின் (டேட்டா+ வாய்ஸ்) நன்மைகளுடன் ஒற்றுப்போனாலும் கூட எஸ்எம்எஸ் நன்மையை வழங்கவில்லை.

1000 நிமிடங்கள்
செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 28ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கினாலும் கூட, குரல் அழைப்புகளானது நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்று வரையறுக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1 ஜிபி அளவிலான தரவு
இந்த ரூ.158/- கட்டணத் திட்டத்துடன் வோடபோன் அதன் ரூ.151/- என்கிற ப்ரீபெய்ட் திட்டத்தையும் அதன் கேரள வட்டத்தில் வெளியிட்டுள்ளது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் பயனாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் (ரோமிங் அழைப்புகள் உட்பட) மற்றும் 1 ஜிபி அளவிலான தரவு ஆகியவற்றை வழங்கும்.

அனைத்து வட்டங்களிலும் கிடைக்கும் திட்டங்கள்
இந்த இரண்டு கட்டண திட்டங்கள் மட்டுமின்றி வோடபோன் நிறுவனமானது, ஒரு நாளைக்கு 1.4 ஜிபி மற்றும் 2.5ஜிபி அளவிலான தரவு நன்மைகள், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் ஆகியவற்றை வழங்கும் ரூ.199, ரூ.348, ரூ.458/- மற்றும் ரூ.509/- ஆகிய திட்டங்களை அனைத்து வட்டங்களிலும் வழங்கி வருகிறது.


ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா
ரூ.199/- ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ,ரூ.348/- ஆனது 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேசமயம் ரூ.458 மற்றும் ரூ.509/- ஆனது முறையே 84 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் அதன் நன்மைகளை வழங்குகிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications