அம்பானியின் வியாபர தந்திரத்தை வைத்தே ஜியோவிற்கு ஆப்பு வைத்த வோடாபோன்.!

ஜியோவின் திட்டங்களை அப்படியே "காப்பி அடித்து" தனக்கே உரிய திட்டங்களாக போட்டி நிறுவனங்கள் வழங்க தொடங்கின. குறிப்பாக ஏர்டெல், தற்போது வோடாபோன்.!

|

ஜியோவின் அறிமுக நாள் வரையிலாக - 100எம்பி டேட்டா கூட 'கொள்ளைவிலையில்' தான் விற்கப்பட்டது என்பதை நாம் யாவருமே அறிந்திருக்கவில்லை.

அதை நன்கு அறிந்த "100% வியாபாரி" ஆன முகேஷ் அம்பானி - மிகவும் வியாபார நோக்கம் கொண்டே - ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை நிறுவினார். இலவச சேவைகளை தொடங்கி இதர நிறுவனங்களின் தூக்கத்தை கெடுத்தார், பின்னர் மலிவு விலைக்கு சேவைகளை வழங்கத்தொடங்கி இதர பெருநிறுவனங்ளையும் மலிவான விலைக்கு சேவைகளை வழங்க வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கினார்.

குறிப்பாக ஏர்டெல், தற்போது வோடாபோன்.!

குறிப்பாக ஏர்டெல், தற்போது வோடாபோன்.!

ஒருகட்டத்தில் அம்பானியின் இந்த வியாபார தந்திரம் அவரின் நிறுவனத்திற்கு எதிராகவே திரும்ப ஆரம்பித்தது. அதாவது ஜியோவின் திட்டங்களை அப்படியே "காப்பி அடித்து" தனக்கே உரிய திட்டங்களாக போட்டி நிறுவனங்கள் வழங்க தொடங்கின. குறிப்பாக ஏர்டெல், தற்போது வோடாபோன்.!

2 புதிய திட்டங்களை தொகுத்துள்ளது.!

2 புதிய திட்டங்களை தொகுத்துள்ளது.!

ஆம். தற்போது வோடபோன் நிறுவனம் - 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் இலவச அழைப்புகளை விரும்பும் - அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுகான 2 புதிய திட்டங்களை தொகுத்துள்ளது. அறிமுகமாகியுள்ள இரண்டு ரீசார்ஜ் தொகுப்பில், ஒரு நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டமொன்று இருக்க மறுகையில் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் ஒரு திட்டமும் இருக்கிறது.

எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.!

எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.!

ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் எம்என்பி (MNP) பயனர்களுக்கும் இந்த திட்டங்கள் வாங்குவதற்கு கிடைக்குமென - வோடபோன் ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் பிரீமியம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகள் உயர்த்தபட்டுள்ள அதே வாரத்தில், அதே மாதிரியான விலை நிர்ணயம் கொண்ட திட்டங்கள் வெளியாகும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

ரூ.496/- ரீசார்ஜ்.!

ரூ.496/- ரீசார்ஜ்.!

ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான தரவு மற்றும் எந்தவொரு நெட்வொர்க்கிலும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்கும் வோடாபோனின் புதிய ரூ.496/- திட்டமானத்திகு மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். கூடுதலாக, இந்த திட்டத்தின் கீழ் இலவச உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்பு நன்மைகளும் கிடைக்கும்.

நேரடியாக போட்டியிடுகிறது.!

நேரடியாக போட்டியிடுகிறது.!

இந்த திட்டத்தின் கீழ் எந்த விதமான தினசரி அல்லது வாராந்திர அழைப்புகளுக்கன வரம்பும் கிடையாது என்று நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்த புதிய வோடாபோன் திட்டம் ஜியோவின் ரூ.459/- ரீசார்ஜ் திட்டத்துடன் நேரடியாக போட்டியிடுகிறது. ஜியோ திட்டத்தின் அதே நன்மைகளை மட்டும் கொண்டிருக்காமல் இலவச எஸ்எம்எஸ் மற்றும் அதன் சொந்த பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகிறது.

ரூ.177/- ரீசார்ஜ்.!

ரூ.177/- ரீசார்ஜ்.!

மறுகையில் உள்ள மற்றொரு புதிய திட்டமான ரூ.177/- ஆனது மொத்தம் 28 நாள் செல்லுபடியாகும். ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான தரவு மற்றும் நெட்வொர்க்குகளுக்குள்ளே நாடு முழுவதுமான வரம்பற்ற இலவச அழைப்பு நன்மையையும் வழங்குகிறது.

ஜியோவிடம் இல்லை.!

ஜியோவிடம் இல்லை.!

எனினும், பயனர் இந்த திட்டத்தின் கீழ் இலவச உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ரோமிங் அழைப்பு வசதியை பெற முடியாது. 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கி மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும்ளை எந்த திட்டமும் ஜியோவிடம் இல்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ரூ.69/- ரீசார்ஜ்.!

ரூ.69/- ரீசார்ஜ்.!

சில தினங்களுக்கு முன்னர், வோடபோன் நிறுவனம் ரூ.69/- வரம்பற்ற உள்ளூர் மற்றும் எல்.டி.டி அழைப்புகளுடன் 500எம்பி அளவிலான டேட்டா வழங்குமொரு சூப்பர்வீக் திட்டத்தை அறிமுகம் செய்தது என்பதும் அது 7 நாட்கள் செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Launches Plan With 1GB Daily Data, Unlimited Calls for 84 Days at Rs. 496. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X