வங்காளம் : வோடபோன் புதிய திட்டம் என்ன?
தற்போது வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு போனஸ் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவனத்தின் வணிகத் தலைவர் அர்விந்தர் சிங் சச்சதேவ் தெரிவித்தார்.!
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை வழங்குநரான வோடபோன் ரம்ஜானின் சந்தர்ப்பத்தில் தனது புதிய திட்டத்தை வங்காளத்தில் அறிமுகப்படுத்துகிறது, மேலும் மக்களிடம் பெரிய வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு போனஸ் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவனத்தின் வணிகத் தலைவர் அர்விந்தர் சிங் சச்சதேவ் தெரிவித்தார் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல சிறப்பு ஆபர்களை அறிவித்துள்ளது வோடபோன் நிறுவனம்.
ஃபாஸ்ட் ரீசார்ஜ் கார்ட் 91 திட்டம் பொருத்தவரை குறிப்பிட்ட நேரம் வரை இலவச கால்அழைப்புகள், மற்றும் 4ஜி, 3ஜி டேட்டா பயன்பாடுகளை பெறமுடியும் என வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், யமன், கத்தார், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு ஐஎஸ்டி கால் அழைப்புகளை குறைந்த செலவில் வழங்குகிறது.
தற்போது பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை இலவசமாக வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது, மேலும் பல சலுகைகள் அளிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வோடபோன் ரம்ஜான் சிறப்பு பேக் ரூ. 5க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் செல்லுபடியாகும்இ மேலும் 2 ஜி வேகத்தில் வரம்பற்ற மொபைல் டேட்டாவை வழங்குகிறது. *444*5# டயல் மூலம் இந்த திட்டத்தை பெறமுடியும். அடுத்து பேக் ரூ. 19க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் பயன்படக்கூடிய 3ஜி டேட்டாவை வழங்குகிறது. *444*19# என்ற டயல் ரூ .19 க்கு வரம்பற்ற தரவு வாய்ப்பை அனுபவிக்க முடியும்.
வோடபோன் ரூ.253க்கு ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற அழைப்புகள் (உள்ளூர் மற்றும் எஸ்டிடி) மற்றும் 2 ஜி வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை பெறமுடியும். மேலும் ரூ.345க்கு ரீசார்ஜ் ரீசார்ஜ் பேக் இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுடன் 1 ஜிபி தினசரி தரவு வரம்பாக வருகிறது.


Click it and Unblock the Notifications