50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் அறிவித்தது வோடபோன்.!

|

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைதொடர்பு நிறுவனமான வோடாபோன், கடந்த செவ்வாய்கிழமை அன்று 'சர்வதேச எதிர்கால வேலைவாய்ப்பு திட்டம்' என்பதை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் 50லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாடு பயிற்சி மற்றும் கெரியர் வழிகாட்டுதல் கிடைக்கும். மேலும், 2022 க்குள் 18 நாடுகளில் 1கோடி இளைஞர்கள் இதன் மூலம் பயனடைவர் என தெரிவித்துள்ளது.

50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் அறிவித்தது வோடபோன்.!

வோடாபோன் நிறுவனம் Future jobs finder எனும் இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இதன் மூலம் அனைத்து இளைஞர்களும் உலக அளவில், டிஜிட்டல் பெருளாதாரத்தில், கெரியர் வழிகாட்டுதல், பயிற்சி பெறுதல், சரியான வேலையை தேடுதல் போன்றவற்றை செய்ய முடியும் என கூறுகிறது.

இந்த இணையதளத்தில் முதலில்,தொடர் மனத்திறன் தேர்வுகளின்(Series of psychometric tests) மூலம் இளைஞர்களின் திறன் மற்றும் ஆர்வத்தை அறிந்து கொண்டு, அவர்களுக்கு ஏற்ற துறை/வேலையை கண்டறியும்.

இரண்டாம் படியில், அவர்கள் தேர்வு செய்த இடத்தை பொறுத்து, அங்குள்ள வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கும்.

வோடாபோன் இந்தியாவின், எம்.டி & சி.ஈ.ஓ சுனில் சூட் கூறுகையில், உலகிலேயே இந்தியாவில் தான் அதிக இளைஞர்கள் உள்ளனர். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கமே, டிஜிட்டல் திறன்களையும் புதிய தொழில்நுட்பங்களையும் அனைவரும் அறிவதே ஆகும்.

அதன் மூலம், அனைத்து பணியிடங்களும் டிஜிட்டல் மயமாகி, புதிய வேலை வாய்ப்பு உருவாவதால் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவை அதிகரிக்கும். எனவே, எங்களின் இந்த திட்டத்தின் மூலம் எதிர்கால புதிய உலகிற்கு 50லட்சம் இளைஞர்களை தயார்படுத்துகிறோம் என்கிறார்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

எதிர்காலத்தில் உருவாகும் வேலைவாய்பையும் திறன்களையும் இணைப்பதும், இணையவழி படிப்புகளின் மூலம் அந்த திறன்களை மேம்படுத்துவதுமே இந்த திட்டத்தின் நோக்கம்.

சியாமி ரெட்மீ 5, ரெட்மீ நோட் 5, ரெட்மீ 5ஏ: இதில் சிறந்தது எது?சியாமி ரெட்மீ 5, ரெட்மீ நோட் 5, ரெட்மீ 5ஏ: இதில் சிறந்தது எது?

பயனர் இந்த இணையதளத்தில் கிடைக்கும் பல்வேறு டிஜிட்டல் திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும், படிப்புகளையும் இலவசமாகவே பயன்படுத்தலாம். இதில் உள்ள தேர்வுகளை முடிப்பதன் மூலம் கிடைக்கும் திறன் தொகுப்பை (Summary of skills) உங்கள் ரெசியூம் மற்றும் வேலைவாய்ப்பு விண்ணப்பத்தில் இணைத்துக்கொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Vodafone has developed Future Jobs Finder – a new online platform accessible to all youth for career guidance, access to relevant trainings and search meaningful jobs in the digital economy globally

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X