மொபைல் போன் பாதுகாப்பிற்கு வோடோபோன் நிறுவனத்தின் புதிய திட்டம்

By Siva
|

இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு முன்னணி நிறுவனங்களில் ஒன்றான வோடோபோன் நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது சிலபல சலுகைகளை வாரி வழங்கி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய இன்சூரன்ஸ் சலுகை ஒன்றை வழங்கியுள்ளது.

மொபைல் போன் பாதுகாப்பிற்கு வோடோபோன் நிறுவனத்தின் புதிய திட்டம்

இதன்மூலம் ஆறுமாத காலத்திற்குள் புதியதாக வாங்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.50000 வரை இன்சூரன்ஸ் பெற்று தரும் புதிய திட்டம் ஒன்றை வோடோவோன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு 'வோடோபோன் ரெட் ஷீல்டு' திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன் திருடு போனால், சேதம் அடைந்தால் அல்லது ஆண்ட்டி வைரஸ் தாக்கப்பட்டால் இந்த இன்சூரன்ஸ் பணத்தை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம்.

வோடோபோன் ரெட் ஷீல்டு' திட்டத்தின் வர்த்தக தலைவர் அலோக் வர்மா என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'தற்போதைய காலத்தில் ஒரு மொபைல் போன் என்பது மனிதர்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது.

வெறும் போன் செய்வதற்கு மட்டுமே போன் என்று இருந்த காலம் மாறி தற்போது அனைத்து முக்கிய பரிவர்த்தனைகளுக்கும் ஸ்மார்ட்போன் உதவி வருகிறது. அதே நேரத்தில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய மொபைல் போன் திருடு போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ மிகப்பெரிய நஷ்டம் வாடிக்கையாளர்களுகு ஏற்படும்.

பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு மொபைல்போன் இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு இல்லை. இந்த நிலையில் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு 'வோடோபோன் ரெட் ஷீல்டு' திட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்கிறோம். இதன்மூலம் போன் திருடு போனால், கைதவறி கீழே விழுந்து சேதம் அடைந்தாலோ, தண்ணீரில் மூழ்கி செயல்படாமல் போனாலோ அல்லது வைரஸ் காரணமாக போனுக்கு பிரச்சனை ஏற்பட்டாலோ உங்கள் போனுக்குரிய மதிப்பை ரூ.50000க்குள் இருந்தால் பெற்று கொள்ளலாம்

இந்த திட்டத்தில் அதிகமான வாடிக்கையாளர்கள் சேருவதன் மூலம் அவர்களுடைய மொபைலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பதோடு, எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு நஷ்டம் அடையும் வாய்ப்பும் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த வோடோபோன் ரெட் ஷீல்டு' திட்டம் ஆறு மாதத்திற்குள் வாங்கிய போன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த வோடோபோன் ரெட் ஷீல்டு' திட்டத்திற்காக வோடோபோன் நிறுவனம் வருடம் ஒன்றுக்கு ரூ.720 மட்டுமே கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளது. அதுவும் மொத்தமாக பெறாமல் மாதம் ரூ.60, பில்கட்டணத்துடன் இணைத்து கட்டினால் போதுமானது.

இந்த திட்டம் ஒரு மொபைல் போனுக்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே பொருந்தும். மேலும் வோடோபோன் ரெட் ஷீல்டு' திட்டத்தில் இணைபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும். அதுமட்டுமின்றி இடையில் வோடோபோன் ரெட் ஷீல்டு' திட்டத்தில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் சலுகைகளை இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
India's second largest telecom operator, Vodafone has come up with VODAFONE RED SHIELD, a complete device security solution a complimentary insurance for smartphones that assures a protection cover of up to Rs. 50,000 on brand new handsets and those up to six months old.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X