வோடபோன் அறிமுகம் செய்த மலிவு விலை திட்டங்கள்: கடுப்பில் ஜியோ.!
வோடபோன் அதன் பயனர்களைத் தக்க வைத்துக் கொள்ள மிகவும் கடினமாக முயற்சித்து வருகிறது. மலிவு விலையில் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இப்போது ரூ.39 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் திட்டங்கள்
வோடபோன் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டத்தை தனது பயனர்களுக்கான ஆல்-ரவுண்டர் திட்டங்களுடன் இணைத்துள்ளது. தற்போதுள்ள மற்ற அனைத்து திட்டங்களான ரூ.35, ரூ.45, ரூ.65, ரூ.69, ரூ.95, ரூ.145, மற்றும் ரூ.245 திட்டத்துடன் இந்த ரூ.39 திட்டம் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வினாடிக்கு 2.5 பைசா
இந்த திட்டம் ரூ.30 டாக் டைம் உடன் 100 எம்பி 4 ஜி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அனைத்து குரல் அழைப்புகளுக்கும் ஒரு வினாடிக்கு 2.5 பைசா என்று வசூலிக்கிறது. அதேபோல் வோடபோன் நிறுவனம் ரூ.29 மற்றும் ரூ.15 என்ற ரேட்கட்டர் ஆல்-ரவுண்டர் திட்டங்களைப் பல நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது.

முன்னதாக, வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ .45 ஆல்-ரவுண்டர் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ப்ரீபெய்ட் பேக்கின் கீழ், உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் தேசிய ரோமிங்கில் பயனருக்கு 150 நிமிட இலவச அழைப்பு கிடைக்கிறது. இதில் 250 எம்.பி 4 ஜி டேட்டாவும், 100 எஸ்எம்எஸ்ஸும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

வோடபோன் அசத்தல்
ரிலையன்ஸ் ஜியோ போலல்லாமல் வோடபோன் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அதன் சந்தாதாரர்களுக்கு இலவச வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கிறது.


Click it and Unblock the Notifications