Home
News

ஏர்டெல்லுக்கு போட்டியாக Vodafone அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 Prepaid Plans!

வோடபோன் நிறுவனமா அதன் சந்தாதாரர்களுக்காகக் கூடுதல் பயனை வழங்கும் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் ரூ.99 மற்றும் ரூ.555 என்ற இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை தற்பொழுது நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் அறிமுகம் செய்துள்ள இந்த ரூ.99 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என ஒட்டுமொத்தமாக 18 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் சலுகையாக ரூ.999 மதிப்புள்ள ஜீ 5 சந்தா, வோடபோன் ப்ளே சந்தாவும் கிடைக்கிறது. வோடபோனின் இந்த திட்டம் தற்போது கொல்கத்தா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உ.பி. கிழக்கு, உ.பி. மேற்கு மற்றும் மேற்கு வங்க வட்டங்களில் கிடைக்கிறது.

வோடபோன் ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் அறிமுகம் செய்துள்ள இந்த ரூ.555 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என ஒட்டுமொத்தமாக 70 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் சலுகையாக ரூ.999 மதிப்புள்ள ஜீ 5 சந்தா, வோடபோன் ப்ளே சந்தாவும் கிடைக்கிறது. வோடபோனின் இந்த புதிய திட்டம் மும்பையில் மட்டுமே ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இடைநிலை வேலிடிட்டி

இடைநிலை வேலிடிட்டி

வோடபோனின் இந்த ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம், ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தைப் போல் இல்லாமல் டேட்டா மற்றும் வோடபோன் நன்மைகளுடன் வருகிறது. வோடபோன் பயன்படுத்தும் பயனர்களில் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் கிடைக்கும் ஒரு ப்ரீபெய்ட் திட்டமாக இத திட்டம் 70 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கு பின் அறிமுகம் செய்யப்படும் புதிய திட்டங்கள்

விலை உயர்வுக்கு பின் அறிமுகம் செய்யப்படும் புதிய திட்டங்கள்

தொலைத் தொடர்புஆபரேட்டர் நிறுவனங்கள் அண்மையில் அதன் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல புதிய திட்டங்களை நிறுவனங்கள் விலை மாற்றங்களுடன் அறிமுகம் செய்து வருகிறது. கட்டண உயர்வுக்குப் பிறகு, வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் அதிக விலையுள்ள திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை.

Best Mobiles in India

English summary
Vodafone Launched New Rs.99 and Rs.555 Prepaid Plans : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X