அட்ரா சக்க.. எந்த நிபந்தனையும் இல்லாமல் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ்.. 4 புதிய Vodafone திட்டங்கள் அறிமுகம்!
ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல்லுக்கு (Airtel) அடுத்தபடியாக, இந்தியாவின் மூன்றாவது பெரிய மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டராக உள்ள வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, அதன் போஸ்ட்பெய்டு பயனர்களுக்காக 4 புதிய சர்வதேச ரோமிங் பேக்குகளை (International roaming packs) அறிமுகப்படுத்தியுள்ளது.
வோடபோன் ஐடியாவின் இந்த நான்கு புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களின் (Postpaid Plans) மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இவைகள் அனைத்துமே அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) ஆகியவற்றை எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்குகின்றன.

வோடபோன் ஐடியாவின் புதிய சர்வதேச ரோமிங் திட்டங்கள் ஆனது வெறும் ரூ.599 முதல் தொடங்கி ரூ 4,499 வரை செல்கின்றன மற்றும் இந்த அனைத்து திட்டங்களுமே, மொத்தம் 29 நாடுகளில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களுக்கான வரம்பற்ற அணுகலை வழங்குகின்றன.
மேற்கூறிய 29 நாடுகளில் அமெரிக்கா (America) , இங்கிலாந்து (England), தாய்லாந்து (Thailand), இத்தாலி (Italy), யுஏஇ (UAE), ஆஸ்திரேலியா (Australia), சிங்கப்பூர் (Singapore) மற்றும் பல பிரபலமான நாடுகளும் அடங்கும். நன்மைகளை பொறுத்தவரை, இருப்பதிலேயே மிகவும் மலிவான அன்லிமிடெட் சர்வதேச ரோமிங் திட்டமான ரூ.599 ஆனது 24 மணிநேர செல்லுபடியாகும். இது வரம்பற்ற டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் காலிங் ஆகியவற்றை வழங்குகிறது.
அடுத்ததாக உள்ள ரூ.2,999 திட்டமானது ஏழு நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வருகிறது. மூன்றாவது திட்டம் 10 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்குகிறது; இந்த சர்வதேச ரோமிங் திட்டத்தின் விலை ரூ.3,499 ஆகும். கடைசியாக, மிகவும் விலையுயர்ந்த அன்லிமிடெட் சர்வதேச போஸ்ட்பெய்ட் ரோமிங் திட்டமாக ரூ.4,499 உள்ளது. இது 14 நாட்களுக்கு அன் லிமிட்ட் காலிங், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாவை வழங்குகிறது.
இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்ய விரும்பும் வோடாபோன் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் விஐ-யின் அதிகாரப்பூர்வ ஆப்பை (Vi App) பதிவிறக்கம் செய்து, அதன் வழியாக 4 புதிய அன்லிமிடெட் சர்வதேச போஸ்ட்பெய்ட் ரோமிங் திட்டங்களில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இல்லை என்றால், விஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (Vi Official Website) சென்று, உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்ந்தெடுத்து, அதை ஆக்டிவேட் செய்வதற்கான கோரிக்கையை (Request for activation) சமர்ப்பிக்கலாம். சுவாரசியமாக இதை 60 நாட்களுக்கு முன்பே கூட நீங்கள் செய்யலாம்.
மேலும் வோடபோன் ஐடியாவின் 4 புதிய அன்லிமிடெட் சர்வதேச போஸ்ட்பெய்ட் ரோமிங் திட்டங்களுமே, செல்லுபடியாகும் முழு காலத்திற்கும் "ஆல்வேஸ் ஆன்" அம்சத்துடன் (Alwasys On Feature) வருகின்றன. அறியாதோர்களுக்கு, ஆல்வேஸ் ஆன் என்பது வேகம் தொடர்பான தடைகள் (Speed throttling) இல்லாதபடி பார்த்துக்கொள்ளும் ஒரு அம்சமாகும். அறியாதோர்களுக்கு இந்நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான வரம்பற்ற சர்வதேச ரோமிங் திட்டங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications