வோடபோன் ஐடியா வழங்கும் 2ஜிபி இலவச டேட்டா.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? செக் செய்வது எப்படி?

|

வோடபோன் ஐடியா நிறுவனம் சத்தமில்லாமல் தினசரி 2ஜிபி அளவிலான அதிவேக டேட்டா மற்றம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை எந்த விதமான கூடுதல் கட்டணமுமின்றி இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

பெறுவதற்கான தகுதிகள்

மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் இப்போது அறிவித்துள்ள இந்த புதிய சலுகை ஏழு நாட்கள் செல்லுபடியாகும், இருப்பினும்இந்த இலவச நன்மைகளை பெறுவதற்கான தகுதிகள் குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை.

பயனர்களுக்கான

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது, ஆகையால்தற்போது வரையிலாக இது தேர்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கானது என்று வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம்.

64எம்பி கேமராவுடன் அட்டகாசமான மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!64எம்பி கேமராவுடன் அட்டகாசமான மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மேலும் இலவச டேட்டாவின் செல்லுபடியாகும் காலம் ஏழு

ஆனால் வோடபோன் ஐடியா வழங்கும் இலவச 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளின் வருகையை டிவிட்டர் வழியாக பயனர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர், மேலும் இலவச டேட்டாவின் செல்லுபடியாகும் காலம் ஏழு நாட்கள் என்று காட்டப்படுவதாகவும்,இந்த புதிய டேட்டா ஒதுக்கீடு மற்றும் குரல் அழைப்பு நன்மைகளுக்காக நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

121363 ஐ டயல் செய்வதன் மூ

குறிப்பாக 121363 ஐ டயல் செய்வதன் மூலம் உங்கள் வோடபோன் அல்லது ஐடியா இணைப்பில் கூடுதல் டேட்டா மற்றும் குரல் அழைப்பு நன்மைகளின் தகுதியை நீங்கள் சரிபார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு நீங்கள் தகுதியுடைவராக இருந்தால்,இந்த அப்டேட்டை உறுதிபடுத்தும் எஸ்எம்எஸ் ஒன்றை பெறமுடியும்.

இதை லாக் டவுன்

ஒருவேளை உங்களுக்கு இந்த சலுகை இல்லையெனில், நீங்கள் சலுகைக்கு தகுதியற்றவர் என்கிற ஒரு வாய்ஸ் மெசேஜைகேட்பீர்கள். மேலும் இந்த புதிய சலுகையை உறுதிப்படுத்தும் எஸ்எம்எஸ் செய்தி, இதை லாக் டவுன் நாட்களை கடக்கஉதவும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது..

ப்ரைஸ்பாபா-ல்

பிரபலமான தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு வலைப்பதிவான ப்ரைஸ்பாபா-ல் குறிப்பிட்டது என்னவென்றால், இந்த வோடபோன் ஐடியா வழங்கும் இந்த இலவச 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற நன்மையானது சென்னை, கொல்கத்தா,புது தில்லி, பஞ்சாப், மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட்டங்களில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வட்டங்களில் உள்ள

ஆனால் இந்த சலுயை ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, அதாவது தகுதியான வட்டங்களில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் இது கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone is offering free 2GB data per day for 7 days to select users And More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X