Home
News

ரூ.255/-க்கு 2ஜிபி/நாள் பிளானை அறிமுகம் செய்த வோடா; ஏர்டெல் இப்போ வாடா.!

இந்த புதிய திட்டம் மூலம், வோடபோன், நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான 4ஜி/ 3ஜி டேட்டாவை வழங்கும் பாட்டிலுக்குள் நுழைந்துள்ளது.

By Muthuraj

புதிய நிதியாண்டு தொடங்கியுள்ளதால், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அதன் புதிய கட்டணத் திட்டங்களை வழங்கத் தொடங்கி உள்ளன. எந்தவொரு நிறுவனத்தின், எந்தவொரு புதிய ரீசார்ஜ் ஆக இருந்தாலும் சரி, அது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவை எதிர்க்கும் வண்ணம் நன்மைகளை மற்றும் செல்லுபடி காலத்தை கொண்டிருக்க வேண்டும் என்பது, இந்திய டெலிகாம் துறையில் ஒரு எழுதப்படாத சட்டமாகி விட்டது என்பது வெளிப்படை.

ரூ.255-க்கு 2ஜிபி/நாள் பிளானை அறிமுகம் செய்த வோடா; ஏர்டெல் இப்போ வாடா!

அதனை மனதிற்கொண்டு, பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலாரின் ரூ.249 திட்டம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198/- திட்டம் ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் வோடபோன் இந்தியா அதன் புதிய ரூ.255/- கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டேட்டா மற்றும் செல்லுபடி

டேட்டா மற்றும் செல்லுபடி

இந்த புதிய திட்டம் மூலம், வோடபோன், நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான 4ஜி/ 3ஜி டேட்டாவை வழங்கும் பாட்டிலுக்குள் நுழைந்துள்ளது. மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டமானது, மொத்த செல்லுபடியாகும் காலத்திற்குள் 56ஜிபி டேட்டாவை வழங்கும்.

வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்

வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்

டேட்டா நன்மைகளை தவிர்த்து இந்த வோடபோன் திட்டமானது ரோமிங் உட்பட "வரம்பற்ற" குரல் அழைப்புகள், மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளையும் வழங்குகிறது. அதாவது இது திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தில் 2800 இலவச எஸ்எம்எஸ்கள் அணுக கிடைக்கும் என்று அர்த்தம்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாக உருட்டபப்டும்.!

ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாக உருட்டபப்டும்.!

வோடாபோன் அறிமுகம் செய்துள்ள இந்த ரூ.255/- திட்டமானது, இப்போது வரையிலாக ஒரு சில வட்டாரங்களில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. மிக விரைவில் அனைத்து வட்டங்களில் கிடைக்கும் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாக உருட்டபப்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையான வரம்பற்ற அழைப்புகளை வழங்கவில்லை.!

உண்மையான வரம்பற்ற அழைப்புகளை வழங்கவில்லை.!

இந்த திட்டத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், அழைப்பு நன்மைகள் மீதான வரம்பு. ஆம், இந்த திட்டமானது ஏர்டெல் மற்றும் ஜியோவை போல உண்மையான வரம்பற்ற அழைப்புகளை வழங்கவில்லை. மாறாக. நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் ஒரு வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டத்திற்கு வட்டம் மாறுபடும்.!

வட்டத்திற்கு வட்டம் மாறுபடும்.!

வட்டத்திற்கு வட்டம் மாறுபடும்.!
வோடாபோனின் ரூ.255/- திட்டத்தின் விலை நிர்ணயம் ஆனது வட்டத்திற்கு வட்டம் மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்களான பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய இரண்டு நிறுவனங்களின் ரூ.249/- ஆதிட்டங்களை பொறுத்தவரை, நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Intros Rs 255 Prepaid Plan With 2GB Data Per Day Limit. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X