வோடபோன் நிறுவனத்தின் புதிய கட்டணத் திட்டங்கள்.!
வோடபோன் நிறுவனம் இப்போது ரூ.445-ரீசார்ஜ் பொறுத்தவரை தினசரி 1ஜிபி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் தற்போது பல ஆபர் மற்றும் சலுகை கட்டணங்கள் அறிவித்துள்ள நிலைமையில், ஜியோவிற்க்கு போட்டடியாக பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் புதிய கட்டணச் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, இப்போது வோடபோன் நிறுவனம் புதிய கட்டணத் திட்டத்தை அறிவித்துள்ளது, இந்த திட்டம் அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் நிறுவனம் இப்போது ரூ.445-ரீசார்ஜ் பொறுத்தவரை தினசரி 1ஜிபி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் வோடபோன் இன்டர்நெட் வேகம் தற்சமயம் குறைந்து வருகிறது என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ரூ.445-ரீசார்ஜ்:
வோடபோன் ரூ.445-க்கு ரீசார்ஜ் செய்தால் 84நாட்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது, அதன்பின் தினசரி 1ஜிபி வீதம் 3ஜி/4ஜி டேட்டாவைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால் அழைப்புகள்:
வோடபோன் இந்த ரூ.445 திட்டம் பொருத்தவரை வரம்பற்ற கால் அழைப்புகளை வழங்குகிறது, எனவே அதிக மக்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது.

ரூ.244-ரீசார்ஜ்:
வோடபோன் வழங்கும் ரூ.244-ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை 70ஜிபி டேட்டாவைப் பெறமுடியும், அதன்பின் வரம்பற்ற கால் அழைப்புகள் இந்த திட்டம் மூலம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறை இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 35 நாட்களுக்கு பயன்படும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.

ரூ.346-ரீசார்ஜ்:
வோடபோன் வழங்கும் ரூ.346-ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை 56ஜிபி டேட்டாவைப் பெறமுடியும், அதன்பின்பு தினசதி 1ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும், அதன்பின் வரம்பற்ற கால் அழைப்புகள் இந்த திட்டம் மூலம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications