வோடபோன் அறிமுகப்படுத்தும் ரூ.299 பிரீபெய்ட் திட்டம்.! என்னென்ன சலுகைகள்?

|

வோடபோன் நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இன்று அந்நிறுவனம் புதிய ரூ.299 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் தான் உள்ளது என்று கூறவேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ரூ.299 ப்ரீபெய்ட்

தற்சமயம் வோடபோன் அறிமுகம் செய்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலுமட வோடபோன் நிறுவனம் இதற்குமுன்பு அறிவித்த திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.129 ப்ரீபெய்ட்

வோடபோனின் ரூ.129 பிரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டதில் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த திட்டங்களை பார்ப்போம்.

வோடபோன் ரூ.209 ப்ரீபெய்ட்

வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

வோடபோன் ரூ.351 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.351 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு, தினசரி 100எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி 56 நாட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எவ்வித டேட்டா பலன்களும்வழங்கப்படவில்லை என்பதால்,

டேட்டா பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தனியே டேட்டா சலுகையை தேர்வு செய்ய வேண்டும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ரூ.479 ப்ரீபெய்ட்

வோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச எஸ்எம்எஸ், ரோமிங், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

ஹேக் செய்து ஆப்பிள் நிறுவனத்தில் வேலை கேட்ட மிரட்டல் சிறுவன்.! ஆனாலும் கைது.!

வோடபோன் ரூ.1,699 ப்ரீபெய்ட்

வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது. பின்பு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த திட்டத்தை ஒரு வருடம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் வோடபோன் பிளே பயன்படுத்தும்

வசதியும் வழங்கப்படுகிறது, இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.

சியோமி 32இன்ச் டிவி ரூ.12,499: எம்ஐ-க்கு விலையை குறைந்த பிளிப்கார்ட்.

வோடபோன் ரூ.1,999 ப்ரீபெய்ட்

வோடபோன் நிறுவனத்தின் புதிய ரூ.1,999-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை 365நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவனுக்காக ஆக்டோபஸ் உடையை உருவாக்கிய பிட்காயின் மில்லியனர்!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Vodafone introduces Rs 229 prepaid plan with 2GB daily data for 28 days : Read more about this in Tamil GizBot

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more