வோடபோன் நிறுவனம் மிரட்டலான ரூ.209, ரூ.479 மற்றும் ரூ.529 திட்டங்கள் அறிமுகம்.!
வோடபோன் வழங்கும் ரூ.479 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் பயன்படுத்த முடியும், மொத்தமாக 126ஜிபி டேட்டா இந்த திட்ட்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் இன்று காலை ரூ.399 திட்டத்தில் கூடுதலாக 20ஜிபி டேட்டாவை அறிவித்தது, இதற்குபோட்டியாக வோடபோன் நிறுவனம் மூன்று புதிய திட்டங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டங்கள் அனைவருக்கும்
பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

வோடபோன் நிறுவனம் இப்போது ரூ.209, ரூ.479 மற்றும் ரூ.529 என்ற மூன்று திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த திட்டங்களில் உள்ள டேட்டா நண்மைகள் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.209 திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 42ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

வோடபோன் ரூ.479 திட்டம்:
வோடபோன் வழங்கும் ரூ.479 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் பயன்படுத்த முடியும், மொத்தமாக 126ஜிபி டேட்டா இந்த திட்ட்தில் கிடைக்கிறது. மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.529 திட்டம்:
வோடபோனின் ரூ.529 திட்டத்தில் தினசரி 1.5டேட்டா வீதம் 90 நாட்கள் பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தில் 135ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் தினசரி 300எஸ்எம்எஸ் மற்றம் இலவச கால் அழைப்புகள் போன்ற அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.

வோடபோன் ரூ.799-திட்டம்:
இதற்குமுன்பு வோடபோன் வழங்கும் ரூ.799-திட்டத்தில் கூடுதலாக 126ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 4.5ஜிபி டேட்டா மற்றும் 10எஸ்எம்எஸ் இலவச கால் அழைப்புகள் போன்றவை வழங்கப்படுகிறது


Click it and Unblock the Notifications








