Home
News

Vodafone Rs.558, Rs.398 Prepaid Plans: புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன்! என்னென்ன சலுகைகள்.!

வோடபோன் நிறுவனம் தற்சமயம் ரூ.558 மற்றும் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த பட்ஜெட் திட்டங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

ரூ.558 மற்றும் ரூ.398 ப்ரீபெய்ட்

ஆனால் வோடபோன் தற்சமயம் அறிமுகம் செய்துள்ள இந்த ரூ.558 மற்றும் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டங்கள்மும்பை மற்றும் மத்திய பிரதேச வட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது. கூடியவிரைவில் இந்த திட்டங்கள் அனைத்துவட்டங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வோடபோன் ரூ.558-ப்ரீபெய்ட்

வோடபோன் ரூ.558-ப்ரீபெய்ட்

வோடபோனின் ரூ.558-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தனிசரி 3ஜிபி டேட்டா வசதியுடன் வருகிறது. குறிப்பாக இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். ஆகவே இந்த திட்டத்தின் மொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு 168ஜிபிடேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர தினசரி 100எஸ்எஸ்எம், வரம்பற்ற கால் அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கிறது. கூடுதலாக ஜீ 5 சந்தாவுடன் வோடபோன் ப்ளே சந்தாவையும் வழங்குகிறது இந்த புதிய திட்டம்.

வோடபோன் ரூ.398-ப்ரீபெய்ட்

வோடபோன் ரூ.398-ப்ரீபெய்ட்

வோடபோனின் ரூ.398-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, குறிப்பாக இந்ததிட்டதின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ்,ஜீ5 சந்தா உள்ளிட்ட சலுகைகளையும் பெறமுடியும். மேலும் வோடபோன் நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம்செய்த சிறப்பான திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் நிறுவனம் சமீபத்தில் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக ரூ.449 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வோடபோன் ஐடியா ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு என 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்துடன் கூடுதல் நன்மைகளாக வோடபோன் ப்ளே மற்றும் ஜீ5 போன்ற இலவச சேவைகளும் வழங்கப்படுகிறது.

ரூ.997-திட்டம்

ரூ.997-திட்டம்

வோடபோனின் அருமையான திட்டம் என்றால், ரூ.999-திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பொறுத்தவரை தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ரூ.599-திட்டத்தின் அடுத்த பதிப்பாக ரூ.997 வருகிறது, அதன்படி ரூ.599-திட்டம் ஆனது 84நாட்களுக்கு வழங்கும் அதே நன்மைகளை ரூ.997-திட்டம் 180நாட்களுக்கு வழங்குகிறது. கண்டிப்பாக வோடபோனின் இந்த ரூ.997-திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது. தற்போது வரையிலாக வோடபோன் ரூ.997 ரீசார்ஜ் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது.

ரூ.99 ப்ரீபெய்ட்

ரூ.99 ப்ரீபெய்ட்

வோடபோன் அறிமுகம் செய்துள்ள இந்த ரூ.99 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என ஒட்டுமொத்தமாக 18 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் சலுகையாக ரூ.999 மதிப்புள்ள ஜீ 5 சந்தா, வோடபோன் ப்ளே சந்தாவும் கிடைக்கிறது. வோடபோனின் இந்த திட்டம் தற்போது கொல்கத்தா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உ.பி. கிழக்கு, உ.பி. மேற்கு மற்றும் மேற்கு வங்க வட்டங்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Introduced New Rs. 558 and Rs 398 prepaid plans in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X