Home
News

Vodafone Idea-வின் ஸ்பெஷல் ரீசார்ஜ்.. 17 OTT, டெய்லி 3GB, வாய்ஸ், SMS.. இந்த VIVO 5ஜி போன் மீது மட்டும்!

விவோ (Vivo) மற்றும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea - VI) ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து, ஒரு குறிப்பிட்ட விவோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி கனெக்ஷன் மற்றும் ஓடிடி (OTT) தளங்களுக்கான இலவச அணுகலுடன் கூடிய பிரத்யேக ப்ரீபெய்ட் பண்டில் திட்டத்தை (Exclusive prepaid bundle plan) அறிவித்துள்ளன. அது என்ன மாடல்? இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

வோடபோன் ஐடியா நிறுவனமானது விவோ வி50இ ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கான ரூ.1,197 மதிப்புள்ள பிரத்யேக ப்ரீபெய்ட் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் 12 மாத காலத்திற்கு விஐ மூவிஸ் & டிவி (Vi Movies and TV) சந்தா, ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஜீ5, சோனி லைவ், லயன்ஸ்கேட் ப்ளே, ஃபேன்கோட் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 17 ஓடிடி தளங்களுக்கான அணுகலை வழங்குகிறது.

Vodafone Idea-வின் ஸ்பெஷல் ரீசார்ஜ்.. இந்த VIVO 5ஜி போன் மீது மட்டும்!

மேலும் இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 350 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் பெற முடியும். வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். இந்த பிரத்யேக ப்ரீபெய்டு திட்டம் ஏற்கனவே உள்ள விஐ கஸ்டமர்கள் மற்றும் புதிய விஐ பயனர்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கும் என்று விஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2025 ஏப்ரல் 17 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரையிலாக விவோ வி 50இ ஸ்மார்ட்போனை வாங்கும் அனைவருக்கும் இந்த திட்டம் அணுக கிடைக்கும். இந்த சலுகையை செயல்படுத்த, விவோ வி50இ ஸ்மார்ட்போனை வாங்கிய பயனர்கள், தங்களது ஸ்மார்ட்போனில் ஒரு விஐ ப்ரீபெய்டு சிம் காட்டை ர் பயன்படுத்தி, அவர்களுக்கு பிரத்யேக கிடைக்கும் ரூ.1,197 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

நினைவூட்டும் வண்ணம் விவோ வி50இ ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் ஆனது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC), 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,600mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் ஆகிய முக்கிய அம்சங்களுடன் வருகிறது. அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்த ஸ்மார்ட்போனின் ​​8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.28,999 க்கும் மற்றும் ரூ.30,999 க்கும் வாங்க கிடைத்தது.

பின்னர் மே மாதத்தில் விவோ நிறுவனம் அதன் விவோ வி50 எலைட் எடிஷன் (Vivo V50 Elite Edition) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. விவோ வி50 சீரீஸ்-ன் (Vivo V50 Series) மேம்படுத்தப்பட்ட வேரியண்ட் ஆக வந்த இந்த ஸ்மார்ட்போன் - 6000எம்ஏஎச் பெரிய பேட்டரி, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மற்றும் ZEISS உடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட கேமரா செட்டப்பை வழங்குகிறது

விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போன் கடந்த மே 15 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை சேனல் பார்ட்னர்களின் வழியாக வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் வாடிக்கையாளர்கள் சார்ஜிங் கேபிள், அடாப்டர், ப்ரொடெக்டிவ் கேஸ் மற்றும் விவோ TWS 3e டார்க் இண்டிகோ ஆகியவற்றையும் பெறுவார்கள். விலையை பொறுத்தவரை விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போன் ரூ.41,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Introduced Exclusive Plan Rs 1197 in India For Vivo V50e 5G Smartphone Buyers Till June 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X