Home
News

Vodafone தரும் டபுள் டேட்டா சலுகை உங்களுக்கும் வேண்டுமா? அப்போ இதை படிங்க!

வோடபோன் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு, மூன்று 1.5 ஜிபி தினசரி தரவுத் திட்டங்களை டபுள் டேட்டா சலுகையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டபிள் டேட்டா சலுகை வோடாபோனின் ரூ.297 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் உடனும் பயனர்களுக்குக் கிடைக்கிறது என்பது சிறப்பு. டபிள் டேட்டா சலுகை கிடைக்கும் வோடபோன் திட்டங்களின் விபரங்களைப் பார்க்கலாம்.

வோடபோன் FRC திட்டங்கள்

வோடபோன் FRC திட்டங்கள்

வோடபோன் நெட்வொர்க்கில் கிடைக்கும் ஐந்து முதல் ரீசார்ஜ் திட்டங்கள் FRC திட்டங்கள் ரூ.97, ரூ.197, ரூ.297, ரூ.497 மற்றும் ரூ.649 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போதுள்ள பயனர்களுக்கும் கிடைக்கின்றன, ஆனால் இதை விடச் சற்று குறைந்த விலையில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, தற்போதுள்ள சந்தாதாரர்களால் ரூ.97 எஃப்.ஆர்.சி ரீசார்ஜ் திட்டத்தை ரூ.45க்கு பெறலாம்.

வோடபோன் ரூ.97 திட்டம்

வோடபோன் ரூ.97 திட்டம்

வோடபோன் ரூ.97 FRC திட்டமானது நிறுவனத்தின் அடிப்படை பயனர்களுக்கானது, இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு ரூ.45 மதிப்பிலான டாக் டைம், 100 எம்.பி 2 ஜி / 3 ஜி / 4 ஜி தரவு மற்றும் அனைத்து நெட்வொர்க் அழைப்புகளும் வினாடிக்கு ஒரு பைசா கட்டணம் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

வோடபோனின் ரூ.197 FRC திட்டம்

வோடபோனின் ரூ.197 FRC திட்டம்

வோடபோனின் இந்த ரூ.197 என்ற FRC திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மை, அனைத்து நெட்வொர்க் பயனர்களுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு, 300 எஸ்.எம்.எஸ் மற்றும் 28 நாட்களுக்கான வோடபோன் சிறப்பு சந்தா என்று அனைத்தும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இதற்குப் பின் பயனர்கள் ஆல் ரவுண்டர் திட்டத்தையே அல்லது காம்போ திட்டத்தையே ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

வோடாபோனின் ரூ.297 திட்டம்

வோடாபோனின் ரூ.297 திட்டம்

வோடாபோனின் டபிள் டேட்டா சலுகை கிடைக்கும் மூன்று திட்டங்களில் முதல் திட்டம் ரூ.297 திட்டம் தான். இத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா + 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் கூடுதல் வோடபோன் சந்தா நன்மைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

வோடாபோனின் FRC ரூ.497 திட்டம்

வோடாபோனின் FRC ரூ.497 திட்டம்

வோடாபோனின் FRC ரூ.497 திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா, டபிள் டேட்டா சலுகையுடன் கிடைக்கிறது. இத்துடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 56 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு போன்ற நன்மைகளுடன் வருகிறது. இத்திட்டத்துடன் வோடபோன் ப்ளே சந்தாவும், ZEE5 சந்தாவையும் வோடபோன் வழங்கி வருகிறது.

வோடாபோனின் FRC ரூ.647

வோடாபோனின் FRC ரூ.647

வோடாபோனின் FRC ரூ.647 திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இத்திட்டம் டபிள் டேட்டா சலுகையுடன் கிடைக்கிறது. இத்துடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு போன்ற நன்மைகளுடன் வருகிறது. மேலும், வோடபோன் இதே டபுள் டேட்டா சலுகையை ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.599 மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் இயக்கி வருகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone introduced Double Data offer on three 1.5GB daily data plans : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X