மஜா அறிவிப்பு: 90 நாள் வேலிடிட்டியோடு Vodafone அறிமுகம் செய்த ரூ.47, ரூ.67, ரூ.78 திட்டங்கள்!

|

வோடபோன் நிறுவனம் ரூ.47, ரூ.67, ரூ.78 ஆகிய மூன்று திட்டங்களை குரல் அழைப்பு, டேட்டா சலுகை இன்றி அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் அறிமுகம் செய்த 3 திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

கொரோனா பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முக்கிய நடவடிக்கையாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை நீடித்து வருவதால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் அறிவித்து வருகின்றன.

ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்படும்

ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்படும்

வோடாபோன் ஐடியாவின் படி, நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் 2020 ஏப்ரல் 17 வரை நீட்டிக்கும். இது மட்டுமல்லாமல், வோடபோன் ஐடியா குறைந்த வருமானம் கொண்ட "குழுவை" சேர்ந்த கிட்டத்தட்ட 100 மில்லியன் பயனர்களின் அக்கவுண்டில் ரூ.10 மதிப்பிலான டாக்டைம் வரவையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

ரூ.47, ரூ.67, ரூ.78 ஆகிய மூன்று விலையில் அறிமுகம்

ரூ.47, ரூ.67, ரூ.78 ஆகிய மூன்று விலையில் அறிமுகம்

இந்த நிலையில் வோடபோன் நிறுவனம் ரூ.47, ரூ.67, ரூ.78 ஆகிய மூன்று விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது குரல் அழைப்புகளுக்கோ, டேட்டா சலுகைகளுக்கோ வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.47-க்கு அறிமுகம்

ரூ.47-க்கு அறிமுகம்

ரூ.47-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் காலர்டியூன் மாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டியானது 28 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ.67-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டம்

ரூ.67-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டம்

ரூ.67-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் காலர்டியூன் மாற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும். அதேபோல் ரூ.78-க்கு வழங்கப்பட்டுள்ள திட்டமானது 89 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel Digital TV, Tata Sky, Sun Direct வழங்கும் நான்கு புதிய இலவச சேனல்கள்!Airtel Digital TV, Tata Sky, Sun Direct வழங்கும் நான்கு புதிய இலவச சேனல்கள்!

காலர்டியூன் மாற்றத்துக்கு எதற்கு திட்டம்

காலர்டியூன் மாற்றத்துக்கு எதற்கு திட்டம்

காலர்டியூன் மாற்றத்துக்கு எதற்கு திட்டம் என்று யோசித்தாலும் இந்த திட்டத்தின் மூலம் இது செல்லுபடியாகும் நாட்களில் இன்காமிங் கால் வேலிடிட்டி அப்படியே இருக்கும். இன்காமிங் கால் வேலிடிட்டியை நீட்டிக்கவே இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மும்பை பகுதியில் மட்டுமே தற்போது கிடைக்கிறது

மும்பை பகுதியில் மட்டுமே தற்போது கிடைக்கிறது

இந்த திட்டங்களானது மும்பை பகுதியில் மட்டுமே தற்போது கிடைக்கிறது. விரைவில் இந்த திட்டம் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தோடு ரூ.10 போன்ற டாக்டைம் ரீசார்ஜ் செய்து குரல் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Vodafone introduce rs.47, rs.67, rs.78 plans with 90 days validity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X