களத்தில் இறங்கிய வோடபோன்: அதிரடியாக தினமும் 3 ஜிபி டேட்டா சலுகை அறிமுகம்

|

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டிப்போட்டுக் கொண்டு திட்டங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் அதிரடியாக களம் கண்டு வருகிறது.

வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் நோக்கில் திட்டங்கள்

வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் நோக்கில் திட்டங்கள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில் பல்வேறு சலுகைகளை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு நிறுவனம் புதிய திட்டத்தை அறிவித்தால், அதே சலுகையை குறைந்த விலையிலோ அல்லது அதே விலையில் கூடுதல் சலுகைகளையோ மற்றொரு நிறுவனம் அறிவித்து வருகிறது.

வாடிக்கையாளர்களை தன் வசம் இழுக்க முயற்சி

வாடிக்கையாளர்களை தன் வசம் இழுக்க முயற்சி

ஜியோ பல்வேறு தரப்பு வாடிக்கையாளர்களையும் கவர்ந்து தன் வசம் இழுத்துக் கொண்டது. இனி இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் மேலும் வாடிக்கையாளர்களை கவரவும் போராடி வருகிறது. ஜியோ கொடுக்கும் நெருக்கடியை சமாளிக்க பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் போராடி தான் வருகின்றன.

ஜியோ ஏர்டெல் இடையேயான போட்டி

ஜியோ ஏர்டெல் இடையேயான போட்டி

இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஜியோ மற்றும் ஏர்டெல் இடையேயான போட்டியை சொல்லலாம். இரு நிறுவனங்களும் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொன்று சலைத்தது அல்ல என்பதை நிரூபிக்கும் நோக்கில் போட்டிப்போட்டுக் கொண்டு திட்டத்தை அறிவித்து வருகிறது.

தினமும் 3 ஜிபி டேட்டா திட்டம் வழங்கும் வோடபோன்

தினமும் 3 ஜிபி டேட்டா திட்டம் வழங்கும் வோடபோன்

இதில் தற்போது வோடபோன் ஐடியா நிறுவனமும் போட்டியில் இறங்கியுள்ளது. வோடபோன் நிறுவனம் தங்களது வாடிக்கையாளார்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா அளவை கொண்ட திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது முதல் கட்டமாக மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிளானை மேம்படுத்தும் விதமாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வோடபோன் அறிவிக்கிறது.

திட்டங்கள் மற்றும் சலுகைகள்

திட்டங்கள் மற்றும் சலுகைகள்

ரூ.558-க்கு ரீசார்ஜ் செய்தால் 56 நாட்களுக்கு திட்டம் செல்லுபடியாகும். இந்த காலக்கட்டத்தில் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ளலாம் அதோடு மட்டுமின்றி 56 நாட்களுக்கும் தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் 398 திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும், வரம்பற்ற அழைப்பு மேற்கொள்ளலாம். இந்த திட்டத்திலும் தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone introduce New prepaid plans offer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X