நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன், ஒவ்வொரு வாரமும் இந்தியாவில் தனது வோல்ட் தடத்தை விரிவுபடுத்திய வண்ணம் உள்ளது. அதன் ஒரு பகுதியாக, கர்நாடகா மாநிலத்தில் வோடபோன் வோல்ட் சேவைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

வெளியான அறிக்கையின்படி, கர்நாடகா மாநிலத்தில் உள்ள மூன்று நகரங்களில் - பெங்களூரு, மைசூர் மற்றும் பெல்காம் - நிறுவனத்தின் வோல்ட் சேவை திறந்துவிடப்பட்டுள்ளது. ஏற்கனேவே குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கோவா, ஹரியானா, தமிழ்நாடு, உத்திர பிரதேதம் மேற்கு மற்றும் உத்திர பிரதேசம் கிழக்கு வட்டாரங்கள் வோடபோன் வோலட் சேவைகள் உள்ளன. இருப்பினும் நிறுவனத்தின் வோல்ட் சேவைகளின் கிடைக்கும் தன்மையானது, சேவை கிடைக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் உங்கள் வட்டாரங்களை சார்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வோடபோனின் கூற்றுப்படி, நிறுவனத்தின் வோல்ட் சேவையானது படிப்படியாக மற்ற வட்டாரங்களுக்கும், நகரங்களுக்கும் விரிவாக்கப்படும். மறுகையில், வோடாபோன் ஆனது வெறும் 20 வோல்ட் ஆதரவு கொண்ட சாதனங்களை மட்டுமே கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதுன். மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் ஆனது 100-க்கும் மேற்பட்ட வோல்ட் ஆதரவு கொண்ட சாதனங்களை கொண்டுள்ளது.
பிரபலமான சாதனங்களுக்கான வோல்ட் ஆதரவு மற்றும் பெருவாரியான நகரங்களில் வோல்ட் சேவை ஆகிய இரண்டும் இல்லாமல் வோல்ட் ஆதரவு கொண்ட சாதனங்களின் பட்டியலை அதிகரிக்க முடியாது என்பது வெளிப்படை.
சமீபத்தில், வோடாபோன் அதன் வோல்ட் ஆதரவு பட்டியலில் மூன்று புதிய சாதனங்களைச் சேர்த்ததும் - சியோமி ரெட்மீ நோட் 4, நோக்கியா 6 மற்றும் ஜியோனி எம்7 பவர் - குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்னும், ஆப்பிள் போன்ற மிகப்பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் பெயர்கள் இந்த பட்டியலில் இணையவில்லை. அவ்வளவு ஏன்.? சாம்சங் நிறுவனத்தின் சாதனங்கள் கூட இந்த பட்டியலில் காணப்படவில்லை. இது ஒரு பெரிய வீழ்ச்சியாகும், ஏனெனில் வோடாபோன் அதன் வோல்ட் சேவையை ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகின்றன.

ஆப்பிள் ஐபோன்களுக்கான வோல்ட் ஆதரவு இல்லாததால் பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ள வோல்ட் சேவையானது மோசமாக பாதிக்கப்படும். ஏனெனில் நாட்டிலுள்ள பல பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இந்த பிராந்தியத்தில் அதிக எண்ணைக்கையிலான ஐபோன் பயனர்கள் உள்ளனர்.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.