Just In
- 11 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 13 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 13 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 14 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
சொந்தமாக 140 கார்கள்.. கோடீஸ்வர அமைச்சர்.. பாதுகாப்பு அதிகாரியாலேயே பலி.. யார் இந்த நபா கிஷோர் தாஸ்?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வோடாபோன் ரூ.509, ரூ.459 மற்றும் ரூ.348/-ல் அதிரடி திருத்தம்; நெருக்கடியில் ஏர்டெல்!
ஒருவழியாக வோடாபோன் இந்தியா நிறுவனமானது அதன் நீண்டகாலம் செல்லுபடியாகும் மூன்று கட்டணத் திட்டங்களில் திருத்தங்கள் ஏற்படுத்தியுள்ளது.

இந்த திருத்தங்களின் வழியே வோடாபோன் இந்தியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான டேட்டா நன்மை கிடைப்பதை உறுதி செய்துள்ளதோடு இதர தனியார் நிறுவனங்களின் டேட்டா நன்மைகளுடன் ஒப்பிடும் அளவிலான நிலைப்பாட்டையும் வோடாபோன் இந்தியா ஏற்படுத்தியுள்ளது.

வோடாபோன் ரூ.509, ரூ.458 மற்றும் ரூ.348
சரி திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்ட வோடாபோன் ரூ.509, ரூ.458 மற்றும் ரூ.348/- ஆகிய மூன்று ப்ரீபெய்ட் கட்டணத் திட்டங்களின் தற்போதைய நன்மைகள் என்ன மற்றும் இதே திட்டங்களின் முந்தைய நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அளவிலான தரவு
வோடாபோன் இந்தியா ரூ.509/- மற்றும் ரூ.458/- கட்டணத் திட்டமானது இப்போது ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான தரவுகளை வழங்குகின்றன. மறுகையில் உள்ள ரூ.348 கட்டணத் திட்டமானது தற்போது ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அளவிலான தரவுகளை வழங்குகிறது.


முக்கிய வட்டாரங்களில் (தமிழ்நாடு உட்பட) மட்டுமே
இந்த மூன்று திட்டங்களுமே நாட்டில் உள்ள அனைத்து வோடபோன் ப்ரீபெய்ட் பயனாளர்களுக்கும் பொருந்தாது என்பதும் வோடாபோன் இந்தியா நிறுவனம் அதன் முக்கிய வட்டாரங்களில் (தமிழ்நாடு உட்பட) மட்டுமே இந்த திட்டங்களை உருட்டியுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக விரைவில் உருட்டப்படலாம்
அதாவது கர்நாடகா, குஜராத், ஹரியானா, கேரளா, தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம் (கிழக்கு) ஆகிய வட்டாரங்களில் இந்த திட்டங்களில் சத்தமின்றி திருத்தங்களை நிகழ்த்தியுள்ளது. இதே மாற்றங்கள் வோடாபோன் இந்தியாவின் மற்ற வட்டாரங்களிலும் மிக விரைவில் உருட்டப்படலாம்.

மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடி
ஒரு நாளைக்கு 1.4 ஜிபி தரவு வழங்கும் வோடபோன் ரூ.509/- ப்ரீபெய்ட் கட்டணத் திட்டமானது 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதையும் மறுகையில் உள்ள ரூ.458/- திட்டமானது மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் ஒரு நாளைக்கு 1.4 ஜிபி தரவு வழங்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.

வோடாபோன் சமன் செய்கிறது
இறுதியாக வோடாபோன் ரூ.348/- என்கிற கட்டணத் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 2.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இந்த திட்டத்தின் வாயிலாக பார்தி ஏர்டெல் வழங்கும் திட்டங்களின் டேட்டா நன்மையை வோடாபோன் சமன் செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டம்
சமீபத்தில், ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான தரவு வழங்கி மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வோடபோன் நிறுவனத்தின் ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டம் திருத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த திட்டமானது அதன் செல்லுபடியாகும் காலம் வரை வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470