Home
News

ரூ.199/-ல் அதிரடி திருத்தம்; ரூ.229/- அறிமுகம்: வரிசைக்கட்டும் வோடாபோன்.!

வோடாபோன் இந்தியா நிறுவனம் மட்டும் தான் ரூ.199/- திட்டத்தை அறிவிக்காத ஒரே நிறுவனமாக இருந்த நிலைப்பாட்டில், தற்போது வோடாபோனும் அதே மாதிரியான ரூ.199/- திட்டடத்தில் பிரதான திருத்தத்தை அறிவித்துள்ளது.

By Muthuraj

இப்போதெல்லாம் எந்த நேரத்தில், எந்த நிறுவனம், என்ன சலுகையை அறிவிக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிகிறது.

ஏர்டெல் தொடங்கிவைக்க, அதனை தொடர்ந்து முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் ஹேப்பி நியூ இயர் 2018 திட்டத்தின் கீழ் ரூ.199/- திட்டத்தை அறிவித்தது, அதனை பின்பற்றி ஐடியா செல்லுலார் நிறுவனமும் அதன் ரூ.199/- திட்டத்தை அறிமுகம் செய்தது.

ரூ.199/-ல் அதிரடி திருத்தம்; ரூ.229 அறிமுகம்: வரிசைக்கட்டும் வோடாபோன்!

வோடாபோன் இந்தியா நிறுவனம் மட்டும் தான் ரூ.199/- திட்டத்தை அறிவிக்காத ஒரே நிறுவனமாக இருந்த நிலைப்பாட்டில், தற்போது வோடாபோனும் அதே மாதிரியான ரூ.199/- திட்டடத்தில் பிரதான திருத்தத்தை அறிவித்துள்ளது.

போட்டியாகவும், அதே மாதிரியான நன்மை.!

போட்டியாகவும், அதே மாதிரியான நன்மை.!

வோடபோன் இந்தியாவின் ரூ.199/- ஆனது திருத்தியமைக்கப்பட்ட ஏர்டெல் நிறுவனத்தின் ரூ,199, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199/- மற்றும் ஐடியா செல்லுலாரின் ரூ,199/-க்கு போட்டியாகவும், அதே மாதிரியான நன்மைகளையும் வழங்குகிறது.

28 ஜிபி அளவிலான டேட்டா.!

28 ஜிபி அளவிலான டேட்டா.!

இப்போது, வோடாபோனின் ரூ.199/- என்கிற கட்டணத் திட்டமானது ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான தரவை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. ஆக மொத்த இந்த திட்டம் 28 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலர் திட்டங்களை ஈடுசெய்துள்ளது.

ஜியோவானது 1.2 ஜிபி டேட்டா.!

ஜியோவானது 1.2 ஜிபி டேட்டா.!

இருப்பினும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் டேட்டா நன்மையை விட வோடபோனின் டேட்டா நன்மை குறைவாகவே உள்ளது. ஜியோவானது இதே விலைக்கு ஒரு நாளைக்கு 1.2 ஜிபி டேட்டாவை வழங்குகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

லோக்கல் மற்றும் ரோமிங் குரல் அழைப்பு.!

லோக்கல் மற்றும் ரோமிங் குரல் அழைப்பு.!

டேட்டா நன்மைகளை தவிர்த்து, வோடாபோனின் ரூ.199/- ஆனது சொந்த நெட்வர்க் உடனான வரம்பற்ற லோக்கல் மற்றும் ரோமிங் குரல் அழைப்புகளை வழங்குகிறது. உடன் 28 நாட்களுக்கும், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் என்கிற நன்மையும் கிடைக்கும். அதாவது ஒரு மாதத்திற்கு 2800 எஸ்எம்எஸ்கள்.

தினசரி குரல் அழைப்பு வரம்பு.!

தினசரி குரல் அழைப்பு வரம்பு.!

இந்த திட்டத்தின் தினசரி குரல் அழைப்பு வரம்பை பொறுத்தமட்டில், நாள் ஒன்றிற்கு 250 நிமிடமும், வாரத்திற்கு 1200 நிமிடங்களுமே கிடைக்கும். மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் திட்டங்களானது தினசரி வரம்பு இல்லாத குரல் அழைப்புகளை வழங்குகின்றன.

பெரும்பாலான வட்டாரங்களில் கிடைக்கிறது.!

பெரும்பாலான வட்டாரங்களில் கிடைக்கிறது.!

வெளிப்படையாக கூறவேண்டுமெனில் வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய இரண்டுமே உண்மையான வரம்பற்ற குரல் அழைப்பு திட்டங்களை செயல்படுத்தவில்லை. திருத்தம் செய்யப்பட்ட வோடாபோனின் ரூ.199/- ஆனது பெரும்பாலான வட்டாரங்களில் கிடைக்கிறது.

ரூ.199/- ஆனது ரூ.269/- என்கிற புதிய திட்டமாகவும் கிடைக்கிறது.!

ரூ.199/- ஆனது ரூ.269/- என்கிற புதிய திட்டமாகவும் கிடைக்கிறது.!

சில வட்டங்களில், திருத்தப்பட்ட திட்டமான ரூ.199/- ஆனது ரூ.269/- என்கிற புதிய திட்டமாக கிடைக்கிறது. இந்த ரூ.269/- ஆனது நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான தரவு மற்றும் சொந்த நெட்வர்க் உடனான லோக்கல் மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை உள்ளடக்கிய வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையை வழங்குகிறது. ஆனால் இது எஸ்எம்எஸ் நன்மைகள் எதையும் வழங்கவில்லை.

ரூ.229/- என்கிற மற்றொரு புதிய திட்டம்.!

ரூ.229/- என்கிற மற்றொரு புதிய திட்டம்.!

திருத்தப்பட்ட ரூ.199/- கட்டணத் திட்டத்துடன் வோடபோன் அதன் ரூ.229/- என்கிற மற்றொரு திட்டத்தை அறிவித்துள்ளது. இது ரூ.199/- திட்டம் வழங்கும் அதே நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டம் புதிதாக வோடபோன் சேவையின் கீழ் இணையும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

Best Mobiles in India

English summary
Vodafone India Responds to Prepaid Data War by Revamping the Rs 199 Tariff Plan With Unlimited Voice and 28GB Data for 28 Days. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X