வோடபோன் & ஃபிளிப்கார்ட்: மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த திட்டம்.!

By Prakash
|

ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் வழங்குவதற்காக இ-காமர்ஸ் போர்டல் ஃப்ளிகார்ட் நிறுவனத்துடன் இணைந்து வோடபோன் நிறுவனம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஃபிளிப்கார்ட்டின் MyFirst4GSmartphone-முன்முயற்சியின் கீழ் கிடைக்கும் என்ட்ரி-லெவல் தேர்ந்தேடுக்கப்பட்ட 4ஜி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு வோடபோன் நிறுவனம் ரூ.2000-வரை கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.

வோடபோன் & ஃபிளிப்கார்ட்: 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த திட்டம்.!

என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலைப் பொறுத்தவரை ரூ.999-ஆக உள்ளது, இதனால் பல்வேறு மக்கள் இந்த சலுகையைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் தேர்ந்தேடுத்தக்கப்பட்ட இன்டெக்ஸ், ஐவூம்ஐ மி4, ஐவூம்ஐ ஐ1, ஐவூம்ஐ ஐ1எஸ் போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு கண்டிப்பாக வோடபோனின் கேஷ்பேக் சலுகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் & ஃபிளிப்கார்ட்: 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த திட்டம்.!

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.150க்கு 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ்களை ஒரே முறையும் அல்லது பல்வேறு கட்டங்களிலும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த கேஷ்பேக் சலுகைப் பொறுத்தவரை முதல் 18மாதங்களின் இறுதியில், வாடிக்கையாளர்களுக்கு ரூ.900-வழங்கப்படும். அன்பின்பு அடுத்த 18மாதங்களின் இறுதியில் ரூ.1,100 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் & ஃபிளிப்கார்ட்: 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த திட்டம்.!

வோடபோன் வழங்கும் கேஷ்பேக் தொகையை எம்-பேசா வாலெட் கணக்கில் சேர்க்கப்படும். இதை கொண்டு ரீசார்ஜ், கட்டணங்கள், பண பரிமாற்றம் அல்லது பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

வோடபோன் ரூ.458/- கட்டணத் திட்டம் இப்போது மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். நன்மைகளை பொறுத்தமட்டில், ஒரு நாளைக்கு1ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டா, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ், ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற உள்ளூர் ஃ எஸ்டிடி ஆகிய நன்மைகளை வழங்குகிறது

Best Mobiles in India

English summary
Vodafone India Partners With Flipkart to Offer 4G Smartphones Starting at an Effective Price of Rs 999 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X