ஜியோபைபர் பீதி: மிரண்டுபோய் வோடாபோன் பார்த்த வேலை.!

சமீப காலமாக நிறைய மாற்றங்களையும், திட்டமிட்ட திருத்தங்களையும் நிகழ்த்திவரும் வோடபோன் ஆனது நிலையான பிராட்பேண்ட் சேவையை, கடந்த ஒரு வருடமாக யூ பிராட்பேண்ட்டின்கீழ் வழங்கி வருகிறது.

|

வோடபோன் இந்தியா நிறுவனமானது அதன் 3ஜி / 4ஜி மொபைல் சேவைகளுடன், வயர்லெஸ் ஹோம் பிராட்பேண்ட் பொதிகளையும் தொகுத்து வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜியோபைபர் பீதி: மிரண்டுபோய் வோடாபோன் பார்த்த வேலை.!

இது சாத்தியமானால் இந்தியாவில் ஒருங்கிணைந்த ஃபாஸ்ட் பிராட்பேண்ட் இணையத்தை வோடாபோம் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தும். உடன் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்க முடியும்.

யூ பிராட்பேண்ட்

யூ பிராட்பேண்ட்

சமீப காலமாக நிறைய மாற்றங்களையும், திட்டமிட்ட திருத்தங்களையும் நிகழ்த்திவரும் வோடபோன் ஆனது நிலையான பிராட்பேண்ட் சேவையை, கடந்த ஒரு வருடமாக யூ பிராட்பேண்ட்டின்கீழ் வழங்கி வருகிறது.

நிலையான பிராட்பேண்ட் மற்றும் வயர்லெஸ் சேவை

நிலையான பிராட்பேண்ட் மற்றும் வயர்லெஸ் சேவை

தற்போது ஏற்கனவே இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் நெதர்லாந்து போன்ற சர்வதேச சந்தைகளில் பிரபலமாக உள்ள வோடபோனின் கம்பைன்டு பிராட்பேண்ட் வணிக மாதிரியை (அதாவது நிலையான பிராட்பேண்ட் மற்றும் வயர்லெஸ் சேவைகள் ஆகியவற்றின் கலவை) இந்தியாவிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமின்றி

சந்தேகத்திற்கு இடமின்றி

தனிப்பட்ட நபரின் தரவு நுகர்வு அளவை அதிகரிக்கும் வோடாபோனின் இந்த நோக்கமானது சந்தேகத்திற்கு இடமின்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அல்டரா பாஸ்ட் ஃபைபர்-டூ-ஹோம் சேவையான ஜியோபைபரின் மீதான அச்சத்தில் தான் நிகழ்ந்துள்ளது. வோடாபோன் மட்டுமின்றி, ஜியோபைபரின் நுழைவானது பிராட்பேண்ட் துறையில் உள்ள ஏர்டெல் பிராட்பேண்ட், ஆக்ட் பைபர், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் போன்ற சேவைகளையும் பாதிக்கும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
'தன்னை' பின்பற்ற வைக்கும்.

'தன்னை' பின்பற்ற வைக்கும்.

கூடிய விரைவில் அறிமுகமாவுள்ள ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையான ஜியோபைபர் (JioFiber) 4ஜி சேவையை போலவே துவக்கத்திலேயே பார்தி ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற பிராட்பேண்ட் சேவையை இடையூறு செய்யும், பின்னர் ஒட்டுமொத்த பிராட்பேண்ட் துறையையும் 'தன்னை' பின்பற்ற வைக்கும் என்பதில் ஐயமில்லை.

அதிவேக பிராட்பேண்ட் சேவை

அதிவேக பிராட்பேண்ட் சேவை

வெளியான தகவலின்படி ஜியோபைபர் ஆனது அதிவேக தரவை, அதாவது 1ஜிபிபிஎஸ் வரையிலான தரவு வேகத்துடன் கூடிய அதிவேக பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும். இருப்பினும், இந்த சேவையின் அதிகாரப்பூர்வ தொடக்க தேதி இன்னமும் தெரியவில்லை.

ஜியோபைபர் சேவைகளுக்கான சோதனை

ஜியோபைபர் சேவைகளுக்கான சோதனை

ஆனால் ஜியோபைபர் சேவையானது இந்த காலாண்டின் இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்பதை வெளியான எல்லா அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. ஜியோ ஏற்கனவே அதன் ஜியோபைபர் சேவைகளுக்கான சோதனையை 10 நகரங்களில் - மும்பை, டெல்லி என்.சி.ஆர், அஹமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நிகழ்த்தி வருகிறது.

ஜியோபைபர் ப்ரீவியூ ஆபர் பற்றிய விவரம் வெளியானது

ஜியோபைபர் ப்ரீவியூ ஆபர் பற்றிய விவரம் வெளியானது

சமீபத்தில் ஹைதராபாத்திலும் கூட, இந்த சோதனை நடப்பதாக அறியப்பட்டது. அங்கு தான் ஜியோபைபர் ப்ரீவியூ ஆபர் பற்றிய விவரம் வெளியானது. அந்த சலுகையானது, பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 100ஜிபி அளவிலான இலவச தரவுகளை அனுபவிக்க உதவும்.

மூன்று மாதம் என்கிற இலவச சேவையானது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது

மூன்று மாதம் என்கிற இலவச சேவையானது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது

இன்றோ, நாளையோ கூட ஜியோபைபர் அறிமுகமானாலும் கூட, முதல் மூன்று ம்,மாதங்களுக்கான இலவச பிராட்பேண்ட் சேவை கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.அதை ஜியோவும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இன்னும் கூடுதல் சுவாரசியம் என்னவனில், அறிமுகத்திற்கு பின்னர் மூன்று மாதம் என்கிற இலவச சேவையானது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

600 ஜிபி அளவிலான டேட்டா ரூ.500/-க்கு

600 ஜிபி அளவிலான டேட்டா ரூ.500/-க்கு

குறிப்பிட்ட இலவச சலுகை காலம் காலம் முடிவடைந்தவுடன் கட்டண சேவை தொடங்கும். அந்த சேவையின் கீழ் 600 ஜிபி அளவிலான டேட்டா ரூ.500/-க்கும் மற்றும் 1000 ஜிபி அளவிலான டேட்டா ரூ.2000/-க்கும் கிடைக்குமெநிக்கிறது சமீபத்தில் வெளியானதொரு அறிக்கை.

இன்னும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

இன்னும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

ஜியோபைபர் திட்டங்கள் கசிவது ஒன்றும் முதல் முறையல்ல, முன்னதாகவே கசிந்துள்ளன., ஆனால் இவைகளை இறுதி திட்டங்களாக கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சற்று கூடுதல் விலை நிர்ணயம் பெறலாம் அல்லது இன்னும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

டிவி சேவையையும் பிராட்பேண்ட் தொகுப்புடன் இணைத்தே வழங்க திட்டமிட்டுள்ளது.

டிவி சேவையையும் பிராட்பேண்ட் தொகுப்புடன் இணைத்தே வழங்க திட்டமிட்டுள்ளது.

ஆனால் மிக நிச்சயாமாக தற்போது சந்தையில் கிடைக்கும் பிராண்ட்பேண்ட் சேவைகளை விட மிக குறைவான விலையில், அதிக அளவிலான தரவு விகிதங்கள் கொண்டிருக்கும். கூடுதலாக, ரிலையன்ஸ் ஜியோ அதன் டிவி சேவையையும் பிராட்பேண்ட் தொகுப்புடன் இணைத்தே வழங்க திட்டமிட்டுள்ளது.

தனித்தனியாக கட்டணம் செலுத்த அவசியம் இருக்காது.

தனித்தனியாக கட்டணம் செலுத்த அவசியம் இருக்காது.

அதாவது ஒற்றை இணைப்பு வழியாக பிராட்பேண்ட் மற்றும் இண்டர்நெட் தொலைக்காட்சி இணைப்பு ஆகியவற்றை வழங்க திட்டமிட்டுள்ளது. இது சாத்தியமானால் உங்கள் லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் கேபிள் டிவி இணைப்பு ஆகியவற்றிற்கு தனித்தனியாக கட்டணம் செலுத்த அவசியம் இருக்காது.

டேட்டா நன்மையுடன் சேர்த்து

டேட்டா நன்மையுடன் சேர்த்து

ஆக ஜியோ பிராண்ட்பேண்ட் ஆனது உங்களுக்கு டேட்டா நன்மையுடன் சேர்த்து ஒரு நிலையான குரல் அழைப்பு நன்மை, ஊடக பகிர்வு, லைவ் மற்றும் கேட்ச் அப் டிவி, ஹோம் ஆட்டோமெட்டேஷன், சர்வைலன்ஸ் மற்றும் கேமிங் ஆகிய ஒருங்கிணைந்த சேவைகள் ஒன்றாக கிடைக்கும். மேலும் பல ஜியோபைபர் பற்றிய தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Vodafone India May Soon Bundle Wired Broadband and Mobile Services. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X