ஏர்டெல்- ஐடியாவிற்கு ஆப்பு: வோடாபோனின் ரூ.47/- அறிமுகம்.!
வோடபோனின் ரூ. 348 திட்டம் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும், அதன்பின்பு இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வோடபோன் நிறுவனம் தற்சமயம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது, இந்த திட்டம் பொறுத்தவரை ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக வெளவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன்பு வோடாபோனின் ரூ.198/- திட்டம் ஆனது நாள் ஒன்றிற்கு 1.4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வரம்பற்ற கட்டண திட்டங்களுடன் போட்டியிடும் முனைப்பாக இந்த திட்டம் திருத்தம் கண்டுள்ளது.

ரூ.47-ரீசார்ஜ்:
வோடபோன் புதிய ரூ.47-ரீசார்ஜ் திட்டத்தில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டாவை வழங்குகிறது, அதன்பின்பு இந்த
திட்டத்தின் வேலிடிட்டி ஒரு நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 348 திட்டம்:
வோடபோனின் ரூ. 348 திட்டம் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும், அதன்பின்பு இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்கப்படுகிறது.


ரூ. 458 திட்டம்:
வோடபோனின் ரூ. 458 திட்டம் பொறுத்தவரை தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 70நாட்களுக்கு வழங்கப்படுகிறது, அதன்பின்பு இந்த திட்டத்தில் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 509 திட்டம்:
வோடபோனின் ரூ. 509 திட்டம் உங்களுக்கு வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. அதேபோல் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 91நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் 100 எஸ்.எம்.எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்:
ரூ.199-திட்டம்: தற்சமயம் ஏர்டெல் வழங்கும் ரூ.199-திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ:
தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.198-திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 28நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications