Home
News

வெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.!

வோடபோன் நிறுவனம் இதற்குமுன்பு ரூ.199-/ திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா மற்றும் 10எஸ்எம்எஸ், இலவச வாய்ஸ் கால் அழைப்புகள் போன்ற சலுகைகளை வழங்கிவந்தது.

By Prakash S

வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு போட்டியா பல்வேறு சலுகையை அறிவித்தது, குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கொடுக்கும் சலுகையை விட அதிகமான சலுகையை கொடுக்க வோடபோன் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.!

ஜியோ நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு பைபர் மற்றும் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்தது, இதனால் டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும். தற்சமயம் வோடபோன் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

78.4ஜிபி டேட்டா:

78.4ஜிபி டேட்டா:

வோடபோன் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள 78.4ஜிபி டேட்டா சலுகை ரூ.199-/ திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் தினசரி 2.8ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால் போன்ற சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 28 நாட்களுக்கு இந்த திட்டத்தைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மற்றும்
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வட்டாரங்களில் மட்டுமே இந்த சிறப்பு சலுகை கிடைக்கும் என்று வோடபோன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வட்டாரங்களிலும் இந்த அட்டகாசமான சிறப்பு சலுகை கிடைக்கும் என வோடபோன் நிறுவனம் கூறியுள்ளது.

இதற்குமுன்பு:

இதற்குமுன்பு:

வோடபோன் நிறுவனம் இதற்குமுன்பு ரூ.199-/ திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா மற்றும் 10எஸ்எம்எஸ், இலவச வாய்ஸ் கால் அழைப்புகள் போன்ற சலுகைகளை வழங்கிவந்தது, தற்சமயம் கூடுதலான டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.

 ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனம் ரூ.198/திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ், இலவச வாய்ஸ்கால் அழைப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.198/திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ், இலவச வாய்ஸ்கால் அழைப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vodafone India Beats Jio Airtel by Offering 78 4GB Data With the Rs 199 Prepaid Plan : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X