ஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக வோடாபோன் வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை.!
இதற்குமுன்பு ஏர்டெல் நிறுவனம் ரூ.339 திட்டத்தில் 20ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும், அதன்படி சில நாட்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்து, அதற்கு போட்டியாக தற்சமயம் வோடபோன் நிறுவனம் அதன் குறிப்பிட்ட திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது. விரைவில் இந்த நிறுவனம் புதிய பல்வேறு புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வோடபோன் ரூ.799-திட்டம்:
வோடபோன் வழங்கும் ரூ.799-திட்டத்தில் கூடுதலாக 126ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டத்தில் ரீசார்ஜ்
செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 4.5ஜிபி டேட்டா மற்றும் 10எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள் போன்றவை வழங்கப்படுகிறது.

வோடபோன் ரூ.549-திட்டம்:
வோடபோனின் ரூ.549-ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 98ஜிபி வீதம் 28 நாட்கள் பயன்படுத்த முடியும், அதன்படி தினசரி 3.5ஜிபி டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ், இலவச வாய்ஸ்கால் அழைப்புகளை இந்த திட்டத்தில் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல்:
இதற்குமுன்பு ஏர்டெல் நிறுவனம் ரூ.339 திட்டத்தில் 20ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.549 மற்றும் 799 திட்டங்கள்:
ஏர்டெல் அறிவித்துள்ள ரூ.549 மற்றும் 799 திட்டங்கள் முறையே தினசரி 3.5ஜிபி டேட்டா மற்றும் 4ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களையும் 28நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ கூடுதல் டேட்டா:
ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக 2ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி ஏற்கனவே இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில்இ இப்போது அறிவித்த சலுகையின் மூலம் 2ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவை பெற முடியும், அதவாது ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக இப்போது 3.5ஜிபி டேட்டாவை பெற முடியும். இந்த திட்டத்தை 84 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








