இப்போது 20 நகரங்களில்.. Vodafone Idea-வின் Wi-Fi காலிங் சேவை.. உங்க போன் Settings-ல் இதை ON செய்வது எப்படி?
விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் வைஃபை காலிங் சேவை (Wi-Fi calling service) ஆனது ஒருவழியாக புதிய பகுதிகளுக்கு விரிவடைந்து உள்ளது. இப்போது இந்த சேவை மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள வட்டத்தில் (மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர்) உள்ள விஐ வாடிக்கையாளர்களுக்கு அணுக கிடைக்கிறது.
இதன் மூலம், விஐ நிறுவனத்தின் வோவை-ஃபை (VoWi-Fi) அல்லது வாய்ஸ் ஓவர் வைஃபை கால் (Voice over Wi-Fi calling) சேவையானது மொத்தம் 20 வட்டங்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் வீட்டிற்குள் இருக்கும்போது வைஃபை காலிங் ஒரு முக்கிய தேவையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பல நேரங்களில், வீட்டிற்குள் இருக்கும்போது நெட்வொர்க் (Network) வலுவாக இருக்காது.

இதுபோன்ற சூழ்நிலைகளில், தெளிவான வாய்ஸ் கால் அனுபவத்திற்காக (Clear voice calling experience) வோடபோன் ஐடியா கஸ்டமர்களால் தற்போது தங்கள் ஃபைபர் அடிப்படையிலான (Fiber based) அல்லது ஏர்ஃபைபர் அடிப்படையிலான வைஃபை நெட்வொர்க்குடன் (Airfiber based Wi-Fi network) கனெக்ட் ஆக முடியும். விஐ நிறுவனத்தின் வைஃபை காலிங் சேவை இப்போது எங்கெல்லாம் கிடைக்கிறது? அதாவது எந்தெந்த வட்டங்களில் கிடைக்கிறது? உங்கள் போனில் வைஃபை காலிங்கை பயன்படுத்த செட்டிங்ஸ்-ல் எதை ஆன் செய்ய வேண்டும்? இதோவிவரங்கள்:
வோடபோன் ஐடியா வைஃபை காலிங் சேவை எங்கெல்லாம் கிடைக்கிறது (Vodafone Idea Wi-Fi Calling Which City)? வோடபோன் ஐடியாவின் வைஃபை காலிங் சேவை பின்வரும் வட்டங்களில் கிடைக்கிறது - தமிழ்நாடு, டெல்லி, கொல்கத்தா, குஜராத், ராஜஸ்தான், உபி கிழக்கு, உபி மேற்கு, பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கோவா, மும்பை, ஹரியானா, மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா, பீகார், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர்.
இந்த பகுதிகளில் உள்ள வைஃபை வாடிக்கையாளர்கள் வைஃபை காலிங்-ஐ அணுகலாம். இது அவர்கள் வீட்டிற்குள் இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, வைஃபை காலிங் சேவையானது நல்ல, தெளிவான காலிங் அனுபவத்தை உறுதி செய்யும். வைஃபை காலிங் செய்ய பயனர்களிடம் இருந்து எந்த விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
மேலும், இன்று அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான புதிய ஸ்மார்ட்போன்கள் (மிட்-ரேன்ஜ் அல்லது பிரீமியம் பிரிவில் இருந்தால்) வைஃபை காலிங்கை ஆதரிக்கின்றன என்பதால், இந்த சேவையை பெரும்பாலானோரால் அணுக முடியும் என்பதில் சந்தேகமே வேண்டாம். உங்கள் போனில் வைஃபை காலிங்கை பயன்படுத்த செட்டிங்ஸ்-ல் எதை ஆன் செய்ய வேண்டும் (How to Turn on Wi-Fi Calling in my Vodafone Idea SIM)?
வைஃபை காலிங் சேவையை அணுக, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் (Settings) ஆப்பிற்கு செல்லவும். அங்கே மொபைல் நெட்வொர்க் (Mobile Network) என்கிற ஆப்ஷனுக்குள் சென்று.. உங்களுக்கு எந்த சிம் கார்டில் வைஃபை காலிங் சேவையை இயக்க வேண்டுமோ அதை கிளிக் செய்யவும். அதாவது டூயல் சிம் கார்டு (Dual SIM Cards) இருந்தால் உங்களுக்கு 2 சிம் கார்டு விருப்பங்கள் தோன்றும். அதில் ஒன்றை தேர்வு செய்யவும்.
பின்னர் வைஃபை காலிங் (WiFi Calling) என்கிற விருப்பத்தை கண்டறிந்து, அதை ஆன் செய்யவும். இதை ஆன் செய்த பின்னர், ஏதேனும் காரணத்தால் உங்கள் வாய்ஸ் காலிங் அனுபவம் தடைபட்டால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த ஆப் செய்யலாம். வைஃபை காலிங் தொடர்பாக உங்கள் ஸ்மார்ட்போனில் வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், நீங்கள் விஐ வாடிக்கையாளராக இருந்தால் விஐ வாடிக்கையாளர் சேவையை (Vi customer care) தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications