நாங்களும் கொடுப்போம்ல.. 2025 வெல்கம் ஆஃபர்.. இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் 50GB இலவசம்.. Vodafone அதிரடி!
வழக்கமாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் வெல்கம் ஆபர்களை அறிவிக்கும். இம்முறை ஜியோ நிறுவனம் 2025 புத்தாண்டிற்காக ஒரு புதிய திட்டத்தை மட்டுமே அறிவித்துள்ள நிலையில், வோடாபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான வெல்கம் ஆஃபர் 2025-ஐ அறிவித்துள்ளது.
வோடாபோன் ஐடியா அறிவித்துள்ள வெல்கம் ஆஃபர் 2025-ன் (Vodafone Idea Welcome Offer 2025) கீழ், குறிப்பிட்ட ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி அளவிலான டேட்டா இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன திட்டம்? 50ஜிபி இலவச டேட்டாவை தவிர்த்து வேறு இந்த திட்டத்தின் கீழ் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

வோடாபோன் ஐடியாவின் ரூ.3,499ப்ரீபெய்ட் திட்டத்தின் மீது தான வெல்கம் ஆஃபர் 2025 அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவொரு 1 ஆண்டு திட்டமாகும். அதாவது இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் முக்கிய நன்மைகளை பொறுத்தவரை, இது டெய்லி 1.5ஜிபி டேட்டா என 365 நாட்களுக்கும் மொத்தம் 547.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.
வெல்கம் ஆஃபர் 2025-ன் கீழ் இலவசமாக கிடைக்கும் 50ஜிபி டேட்டாவுடன் சேர்த்தால், இது மொத்தம் 597.5ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இது தவிர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். ரூ.3,499-ன் கீழ் பிங்கே ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.
பிங்கே ஆல் நைட் நன்மையானது ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை (அதாவது மொத்தம் 6 மணி நேரத்திற்கு) அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்த அனுமதிக்கும். வீக்கென்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மையானது வார நாட்களில் பயன்படுத்தாத மீதமுள்ள டேட்டாவை வார இறுதியில் பயன்படுத்த அனுமதிக்கும்.
கடைசியாக உள்ள டேட்டா டிலைட்ஸ் நன்மையானது ரூ.3499-ஐ ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 2ஜிபி வரையிலான எமர்ஜென்சி டேட்டாவை பெற அனுமதிக்கும். சமீபத்தில் பிங்கே ஆல் நைட் நன்மையானது 6 மணி நேரத்திற்கு பதிலாக நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரை என மொத்தம் 12 மணிநேரத்திற்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் விஐ அதிகாரப்பூர்வ தளத்தில் ரூ.3,499 திட்டத்தின் கீழ் 6 மணி நேரம் மட்டுமே பிங்கே ஆல் நைட் நன்மை கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விஐ கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான "ஹீரோ பேக்குகள்" ஆனது "சூப்பர்ஹீரோ பேக்குகள்" (SuperHero Packs) ஆக மறுபெயரிடப்பட்டன. இதன்கீழ் தான் 6 மணி நேர பிங்கே ஆல் நைட் நன்மை 12 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டது.
சமீபத்தில் வோடாபோன் ஐடியாவானது தனது மலிவு விலை ரீசார்ஜ் ஒன்றின் மீது விலை உயர்வை அறிவித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. விலை உயர்த்தப்பட்ட வோடாபோன் ஐடியா திட்டமானது 1ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.22 மதிப்புள்ள (பழைய விலை) டேட்டா வவுச்சர் ஆகும். ஆரம்பத்தில் ரூ.19 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த இந்த திட்டம் ரூ.22 விலை ஆக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.23 க்கு வந்துள்ளது
இதுவொரு பக்கம் இருக்க கஸ்டமர்களை குஷிப்படுத்தும்படியான ஒரு வேலையையும் விஐ செய்துள்ளது. இந்நிறுவனம் அதன் விஐ மூவீஸ் மற்றும் டிவி (Vi Movies and TV) சேவையில், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) ஓடிடி தளத்தை இணைத்துள்ளது. சன் நெக்ஸ்ட் (SunNXT) உடனான கூட்டணியையும் சேர்த்து தற்போது விஐ மூவீஸ் மற்றும் டிவி சேவையின் கீழ் 16 ஓடிடி இயங்குதளங்களான இலவச அணுகல்களை வாடிக்கையாளர்களால் பெற முடியும்.


Click it and Unblock the Notifications








