ஜியோ, ஏர்டெல், வோடபோன் ப்ரீபெய்ட்: ரூ.450-க்குள் கிடைக்கும் சிறந்த திட்டம் இதுதான்!
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் கட்டண திட்டங்களின் விலைகளை உயர்த்தி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இன்னும் பலருக்கு எந்த திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. ரூ.450-க்குள் ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் பயனர்கள் எந்த திட்டத்தைத் தேர்வு செய்யலாம் என்று கீழே தொகுத்துள்ளோம்.

வோடபோன் ஐடியா ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக ரூ.449 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வோடபோன் ஐடியா ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு என 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்துடன் கூடுதல் நன்மைகளாக வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 போன்ற இலவச சேவைகளும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா,100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச வரம்பற்ற குரல் அழைப்பு என 56 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் நன்மைகளாக விங்க் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவை, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சேவை என பல இலவச சேவைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ.444 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.444 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்கள் செல்லுபடியாகும் காலத்தில் 112 ஜிபி வரையிலான டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம். இத்திட்டத்தின் படி தினமும் 2 ஜிபி டேட்டா 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் இத்திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்களுக்கு வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள் மற்றும் ஜியோவிலிருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு 2,000 இலவச நிமிடங்கள் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications