வோடபோன் ஐடியா VS ஜியோ: ரூ.600 ப்ரீபெய்ட் திட்டங்களில் சிறந்த நன்மையை வழங்கும் நிறுவனம் எது?
ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வோடபோன் ஐடியா நிறுவனம் பல புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் இப்போது வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் கிட்டத்தட்ட ரூ.600 ப்ரீபெய்ட் திட்டங்களில் வழங்கும் சிறப்பான சலுகைகளை இப்போது பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.601 திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் ரூ.601 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இது தவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் ரூ.601 திட்டத்தில் கிடைக்கும். மேலும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் சலுகை, பிங் ஆல் நைட் சலுகை, Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகல், டிஸ்னி + Hotstar விஐபி சந்தா, போனஸ் டேட்டா உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ரூ.601 திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.599 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.599 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். மேலும் ஜியோவின் ரூ.599 திட்டத்தில் Jio apps, JioCloud,JioSecurityபோன்றவற்றிக்கு இலவச அணுகல் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.601 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா மற்றும் போனஸ் டேட்டா நன்மையை வழங்குகிறது. எனவே அதிக டேட்டா விரும்பும் வாடிக்கையாளர்கள் இதை தேர்வு செய்வது நல்லது மேலும் டிஸ்னி + Hotstar விஐபி சந்தா கூட இந்த வோடபோன் ஐடியா ரூ.601 திட்டத்தில் கிடைக்கிறது. அதேசமயம் ஜியோவின் ரூ.599 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கினாலும், 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ தருகிறது. பின்பு சிறந்த இன்டர்நெட் வேகம் வழங்குகிறது ஜியோ. எனவே இந்த இரண்டு நிறுவனங்களின் ரூ.600 திட்டம் ஆனது கிட்டத்தட்ட சிறந்த சலுகைகளை வழங்குகிறது.

இலவச சலுகை
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு மக்களுக்கு உதவிடும் வகையில் வோடபோன் ஐடியா நிறுவனமும்இலவச சலுகையை அறிவித்துள்ளது. அதாவது குறைந்த வருமானம் கொண்ட 60 மில்லியன் சந்தாதாரர்களுக்கு சிறப்பு சலுகையைஅறிவித்துள்ளதாக வோடபோன் ஐடியா நிறுவனம் கூறியுள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.49 பேக்கை இலவசமாகவழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும் வோடபோன் ஐடியாவின் ரூ.49 பேக் ஆனது 100எம்பி டேட்டா, ரூ.38 க்கான டாக் டைம்நன்மையைக் கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.79 காம்போ வவுச்சர் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரூ.79-பேக்கில் 200எம்பி டேட்டா, ரூ.128 டாக் டைம் நன்மைகள் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications