Home
News

Vodafone Idea VS Jio: ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனம் எது?

ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனங்களின் 5ஜி சேவை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஜியோ, வோடபோன் ஐடியா
நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. அதிலும் வோடபோன் ஐடியா நிறுவனம் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் போன்ற அருமையான சலுகைகளை வழங்குகிறது.

குறிப்பாக இந்த திட்டங்களில் அதிக சலுகைகளை

ஜியோ நிறுவனமும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, தளங்களுக்கு இலவச சத்தாக்களை வழங்குகிறது. மேலும் இந்த இரண்டு நிறுவனங்களும் ரூ.299
ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. குறிப்பாக இந்த திட்டங்களில் அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனம் எது என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் போன்ற சலுகைகள்
இந்த வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த திட்டம்.

வோடபோன் ஐடியாவின் திட்டத்தில்

குறிப்பாக வோடபோன் ஐடியாவின் திட்டத்தில் ஜியோவை விட 500 எம்பி குறைவான டேட்டாவை பெறுவீர்கள். ஆனாலும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் போன்ற அருமையான சலுகைகளை வழங்குகிறது வோடபோன் ஐடியா நிறுவனம். ஜியோ நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதுபோன்ற சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் இந்த இரண்டு திட்டங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம் இதுதான். ஜியோவின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை விட வோடபோன் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. மேலும் சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

 வோடபோன் ஐடியா ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 200 எம்பி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் ரூ.107 மதிப்புள்ள டாக்டைம் கிடைக்கும். ஆனால் இந்த ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

வோடபோன் ஐடியா ரூ.111 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.111 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.111 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 200 எம்பி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின்வேலிடிட்டி 31 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் ரூ.111 மதிப்புள்ள டாக்டைம் கிடைக்கும். ஆனால் இந்த ரூ.111 ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

வோடபோன ஐடியா நிறுவனம் ரூ337

அதேபோல் வோடபோன ஐடியா நிறுவனம் ரூ337 ப்ரீபெய்ட் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரூ.337 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classicக்கான இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த ரூ.337 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 31 நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea VS Jio: Rs 299 Prepaid Plan: Which company offers the most benefits?: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X