என்னது வெறும் ரூ.98, ரூ.155 தானா.. இந்த விஷயம் தெரிஞ்சா உங்க செக்கென்ட் சிம் கார்டு Vodafone தான்!
கடந்த 1 வாரத்தில் மட்டுமே இந்திய டெலிகாம் துறையில், பல வகையான புதிய வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்கள் அறிமுகமாகி விட்டன. இதற்கு காரணம் டிராய் (TRAI) மற்றும் அதன் புதிய உத்தரவு தான். டேட்டா நன்மைகள் இல்லாத வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை மட்டுமே மட்டுமே கொண்ட திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்கிற உத்தரவை டிராய் வெளியிட்டது.
அதற்கு இணங்கி, ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகிய 3 தனியார் டெலிகாம் நிறுவனங்களும் புதிய வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை அறிமுகம் செய்தன. அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் புதிய திட்டங்கள் எதையும் அறிமுகம் செய்யவில்லை. ஏனென்றால் இந்நிறுவனத்திடம் ஏற்கனவே இதுபோன்ற திட்டங்கள் உள்ளன.

இப்படியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் எல்லா வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களுமே, தங்களுடைய செக்கென்ட சிம் கார்டுகளை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாகும். இந்த இடத்தில் தான் வோடாபோன் ஐடியாவிடம் (Vodafone Idea) ஏற்கனவே உள்ள வாய்ஸ்-சென்ட்ரிக் திட்டங்களை நாம் கவனிக்க வேண்டும்.
ஏனென்றால் புதிதாக அறிமுகமான எல்லா நிறுவனங்களின் வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களின் வேலிடிட்டி 84 நாட்கள் முதல் தொடங்குகிறது மற்றும் விலை நிர்ணயம் ரூ.400 க்கு மேல் உள்ளது. ஆனால் வோடாபோன் ஐடியாவிடம் ஏற்கனவே உள்ள வாய்ஸ்-சென்ட்ரிக் திட்டங்கள் ஆனது ரூ,98, ரூ.155 என மிகவும் மலிவான விலைக்கு தொடங்குகின்றன.
வோடாபோன் ஐடியா ரூ.98 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 200எம்பி டேட்டா கிடைக்கும். இதில் எஸ்எம்எஸ் நன்மை சேர்க்கப்படவில்லை. 200எம்பி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 10 நாட்கள் ஆகும்.
வோடாபோன் ஐடியா ரூ.155 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ் மற்றும் 1ஜிபி டேட்டா கிடைக்கும். 1ஜிபி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்கள் ஆகும்.
வோடாபோன் ஐடியா ரூ.179 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ் மற்றும் 1ஜிபி டேட்டா கிடைக்கும். 1ஜிபி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.
வோடாபோன் ஐடியா ரூ.189 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ் மற்றும் 1ஜிபி டேட்டா கிடைக்கும். 1ஜிபி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும்.
வோடாபோன் ஐடியா ரூ.199 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். 2ஜிபி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
வோடாபோன் ஐடியா ரூ.209 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ், 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலர் ட்யூன்ஸ் கிடைக்கும். 2ஜிபி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
வோடாபோன் ஐடியா ரூ.218 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ் மற்றும் 3ஜிபி டேட்டா கிடைக்கும். 3ஜிபி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 மாதம் ஆகும்.
வோடாபோன் ஐடியா ரூ.289 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 600 எஸ்எம்எஸ் மற்றும் 4ஜிபி டேட்டா கிடைக்கும். 1ஜிபி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 40 நாட்கள் ஆகும்.
வோடாபோன் ஐடியா ரூ.339 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 600 எஸ்எம்எஸ் மற்றும் 4ஜிபி டேட்டா கிடைக்கும். 1ஜிபி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 48 நாட்கள் ஆகும்.
வோடாபோன் ஐடியா ரூ.369 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 600 எஸ்எம்எஸ் மற்றும் 4ஜிபி டேட்டா கிடைக்கும். 4ஜிபி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான டேட்டா உபயோகத்திற்கு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








