1.5 ஜிபி-க்கு காசு கொடுத்து 3 ஜிபி கிடைச்சா வேண்டாம்னா சொல்லுவோம்.. Vi இன் டபுள் டேட்டா திட்டம்..
வோடபோன் ஐடியா (Vi) அதன் பயனர்களுக்கு டபுள் டேட்டா பெனிஃபிட் என்று அழைக்கப்படும் 'இரட்டை தரவு சலுகை' நன்மையை வழங்கிவருகிறது. இந்தியத் தொலைத் தொடர்பு வட்டத்தில் வேறு எந்த ஒரு ஆபரேட்டரும் தனது பயனர்களுக்கு இப்படி ஒரு சலுகையை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏன், ஜியோ நிறுவனம் கூட இப்படி ஒரு திட்டத்தைத் தனது பயனர்களுக்கு வழங்கவில்லை என்பதைக் கொஞ்சம் நோட் செய்துகொள்ளுங்கள்.

டபுள் டேட்டா பெனிஃபிட் என்றால் என்ன?
டபுள் டேட்டா பெனிஃபிட் என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு முதலில் தெளிவுபடுத்திவிடுவோம், ''டபுள் டேட்டா பெனிஃபிட்'' கிடைக்கும் திட்டங்களை ஒரு பயனர் தேர்வு செய்யும்பொழுது, அந்த பயனருக்குக் கிடைக்கும் தினசரி டேட்டா நன்மை அப்படியே இரட்டிப்பாகக் கிடைக்கும். உதாரணத்திற்கு, ஒரு பயனர் தினமும் 1.5 ஜிபி கிடைக்கும் திட்டத்தைத் தேர்வு செய்திருந்தால், அவருக்கு முழுமையாக 3ஜிபி தினசரி டேட்டா நன்மை இந்த சலுகையில் மூலம் கிடைக்கிறது.

கட்டணம் என்னவோ வெறும் 1.5 ஜிபி டேட்டாவுக்கு தான்
இந்த திட்டத்திற்கான கட்டணம் என்னவோ வெறும் 1.5 ஜிபி டேட்டாவுக்கானது தான், ஆனால், டபுள் டேட்டா சலுகை என்பதனால் அந்த வாடிக்கையாளருக்குத் தினசரி டேட்டா இரட்டிப்பாகவும், இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை வோடபோன் ஐடியா நிறுவனம் இப்போது வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்களுடன் மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்களின் விலையும் கூட கணிசமாகத் தான் இருக்கிறது.

டபுள் டேட்டா சலுகை கிடைக்கும் 3 திட்டங்கள்
சரி இப்போது, Vi நிறுவனத்தின் டபுள் டேட்டா சலுகை கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். இப்போதைக்கு, Vi நிறுவனம் தனது பயனர்களுக்கு டபுள் டேட்டா சலுகையுடன் மூன்று திட்டங்களை மட்டுமே வழங்குகிறது. அதன்படி, ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 ஆகிய திட்டங்கள் டபுள் டேட்டா சலுகை பட்டியலில் உள்ளது. இந்த திட்டங்கள் எவ்வளவு கூடுதல் டேட்டா நன்மையை எத்தனை நாட்களுக்கு வழங்குகிறது என்று தெரிந்துகொள்வோம்.

வோடபோன் ஐடியா ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டம்
ரூ .299 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது டபுள் டேட்டா சலுகை திட்டம் என்பதனால், பயனர் தினமும் மொத்தமாக 4 ஜிபி தினசரி டேட்டாவை அனுபவிக்க முடியும். இத்துடன், இத்திட்டம் வரம்பற்ற அனைத்து நெட்வொர்க்கு குரல் அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் என அனைத்து நன்மைகளையும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இத்துடன் கூடுதல் OTT நன்மையாக Vi மூவிஸ் மற்றும் டிவி நன்மையையும் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ. 449 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ .449 ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு இரட்டை தரவு சலுகையின் கீழ் 4 ஜிபி தினசரி தரவை வழங்குகிறது (சலுகை இல்லாமல் 2 ஜிபி). மேலும், இத்துடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை போன்றவற்றுடன் கூடுதல் நன்மையாக, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச OTT சந்தாவையும் இத்திட்டம் வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தமாக 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

வோடபோன் ஐடியா ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம்
Vi இடமிருந்து கிடைக்கும் இறுதியான டபுள் டேட்டா திட்டம் இதுவாகும். மேலே குறிப்பிட்டுள்ள மற்ற திட்டங்களைப் போலவே இதுவும் தினசரி 4 ஜிபி டேட்டாவை (சலுகை இல்லாமல் 2 ஜிபி டேட்டா) வழங்குகிறது. அதேபோல், அணைத்து நெட்வொர்க் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், Vi மூவிஸ் மற்றும் டிவி தளத்தின் இலவச சந்தாவுடன் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்
இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த திட்டங்கள் அனைத்தும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் சலுகையுடன் வருகின்றன. இது Vi ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட சலுகையாகும், இது பயனர்கள் பயன்படுத்தப்படாத எல்லா தரவையும் வாரம் முதல் வார இறுதி வரை முன்னோக்கிக் கொண்டு செல்ல அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications