Home
News

மொபைல், ஓடிடி, பைபர் மூன்றுக்கும் ஒரே ரீசார்ஜ்.. முதல் பிளானே ரூ.2192 பட்ஜெட்.. தடாலடி மாற்றம்!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் விஐ ஒன் (Vi One) என்னும் புதிய மாற்றம் மூலம் மொபைல் (Mobile), ஓடிடி (OTT), பைபர் (Fiber) ஆகிய மூன்றுக்கும் ஒரேவொரு ரீசார்ஜ் செய்யும் வகையில் 4 திட்டங்களை அறிவித்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

மொபைல், ஓடிடி, பைபர்  மூன்றுக்கும் ஒரே ரீசார்ஜ்! முதல் பிளானே ரூ.2192!

விஐ ஒன் ரூ.2,192 திட்டம் (Vi One Rs 2,192 Plan): இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த நாட்களில் ப்ரீபெய்ட் சிம் கார்டுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கும். அதேபோல 40 எம்பிபிஎஸ் (Mbps) வேகத்தில் பைபர் பிராட்பேண்ட் சர்வீஸ் வழங்கப்படும்.

அதுமட்டுமல்லாமல், 90 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile), சோனி லிவ் மொபைல் (SonyLIV Mobile), விஐ மூவிஸ் மற்றும் டிவி விஐபி (Vi Movies & TV VIP), ஹங்கமா மியூசிக் (Hungama Music), ஜீ5 (ZEE5) சப்கிரிப்ஷன் வழங்கப்படும்.

விஐ ஒன் ரூ.3,109 திட்டம் (Vi One Rs 3,109 Plan): இதுவொரு 93 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும். இந்த நாட்களில் ப்ரீபெய்ட் சிம் கார்டுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கும்.

அதே போல 100 எம்பிபிஎஸ் (Mbps) வேகத்தில் பைபர் பிராட்பேண்ட சர்வீஸ் வழங்கப்படும். முந்தைய திட்டத்தை போலவே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல், சோனி லிவ் மொபைல், விஐ மூவிஸ் மற்றும் டிவி விஐபி, ஹங்கமா மியூசிக், ஜீ5 ஆகியவற்றின் சப்கிரிப்ஷன் கொடுக்கப்படும்..

விஐ ஒன் ரூ.8,390 திட்டம் (Vi One Rs 83,90 Plan): இந்த திட்டம் 368 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த நாட்களில் ப்ரீபெய்ட் சிம் கார்டுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கும். அதேபோல அன்லிமிடெட் பைபர் பிராட்பேண்ட் சர்வீஸ் 40 எம்பிபிஎஸ் (Mbps) வேகத்தில் கொடுக்கப்படும்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல், சோனி லிவ் மொபைல், விஐ மூவிஸ் மற்றும் டிவி விஐபி, ஹங்கமா மியூசிக், ஜீ5 ஆகியவற்றின் சப்கிரிப்ஷன் வருகிறது. மேலும் பின்ஞ் ஆல் நைட் சப்ஸ்கிரிப்ஷனும் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் ப்ரீ டேட்டா கிடைக்கும்.

விஐ ஒன் ரூ.12,155 திட்டம் (Vi One Rs 12,155 Plan): இந்த திட்டமும் 368 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. ப்ரீபெய்ட் சிம் கார்டுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், நாள்தோறும் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படும்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல், சோனி லிவ் மொபைல், விஐ மூவிஸ் மற்றும் டிவி விஐபி, ஹங்கமா மியூசிக், ஜீ5 ஆகியவற்றின் சப்கிரிப்ஷன் வருகிறது. முந்தைய திட்டத்தை போல பின்ஞ் ஆல் நைட் சப்ஸ்கிரிப்ஷனும் கொடுக்கப்படுகிறது. ஜியோ பைபர் பிளான்களிலும் பல்வேறு மொபைல் சலுகைகள் வழங்கப்பட உள்ள நிலையில், வோடபோன் ஐடியா இந்த திட்டங்களை அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Vi One Plan Comes With Fiber, Mobile And OTT Benefits Check 4 New Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X